|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| எது நல்ல உணவு? |
|
| ஒரு ஊரில் ஒரு மகான் வாழ்ந்து
வந்தார். மிக எளிமையாக வாழ்ந்து வந்த அவர் நேர்மையையும், உண்மையையும்
வாழ்க்கையின் இரண்டு கண்கள் என்று போற்றி, அதையே போதித்தும் வந்தார்.
உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் அவரைப் பார்க்க மக்கள் வருவார்கள்.
அவரைத் தெய்வமாகவே பலரும் வணங்கினார்கள். அந்த நாட்டு அரசன் அந்த
மகானை மிகவும் மதித்துப் போற்றி வந்தான். அவர் தன் அரண்மனையில் சில
நாட்கள் தங்க வேண்டும் என்று விரும்பினான். அதனால், அவருடைய எளிமையான
குடிசைக்குச் சென்று மிகவும் வேண்டி தன்னுடன் அழைத்து வந்தான். அவருக்காக
அந்த அரண்மனையில் தனக்காக இருக்கும் தனி அறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான்.
அவருக்காக சிறப்பு உணவுகளைத் தயார் செய்வதற்காக ஒரு சமையல் கலை வல்லுநரையும்
புதிதாக ஏற்பாடு செய்து இருந்தான். |
 |
| அந்த மகானும் அரசனின் விருப்பப்படி
சில நாட்கள் தங்கி இருந்தார். பிறகு மேலும் பல இடங்களுக்குச் செல்ல
வேண்டும் என்பதினால், அரசனிடம் விடை பெற்றுக் கொண்டு அடுத்த ஊருக்குச்
சென்று விட்டார். அவர் சென்ற சில தினங்கள் கழித்து, அந்த மகான் தங்கியிருந்த
அரசனின் தனி அறையில் இருந்த வைர மாலையைக் காணவில்லை என்பதை கவனித்தார்கள்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த அறைக்கு மகானைத் தவிர வேறு யாரும்
செல்லவும் இல்லை. அரசன் மிகவும் கவலைக் கொண்டு இருந்த போது, சில நாட்கள்
கழித்து அந்த மகான் திரும்பி வந்தார். அவர் அரசனிடம் நேராகச் சென்று
தன் பையில் இருந்த வைர மாலையை எடுத்துக் கொடுத்தார். அரசனுக்கு மிகுந்த
ஆச்சரியம். நேர்மையையும், வாய்மையையும் தன் வாழ்நாளின் குறிக்கோளாகக்
கொண்டு அதையே உபதேசித்து வரும் மகானா என் வைரமாலையை திருடினார் என்று
திகைத்திருக்கும் பொழுதே அந்த மகான் கூறினார். "அரசே, என்னை மன்னித்து
விடுங்கள். நேர்மையையும், வாய்மையையும் போதித்து வரும் என் மனதில்
இந்த வைர மாலையை திருட வேண்டும் என்ற எண்ணம் எப்படி, ஏன் ஏற்பட்டது
என்றுத் தெரியவில்லை. ஒரு வாரம் முழுவதும் எனக்கு விருந்து உபச்சாரம்
அளித்த உங்களிடம் திருடி விட்டேன் என்பதே நேற்றுதான் எனக்கு உறைத்தது.
அதனால், இந்த மாலையை உங்களிடம் கொடுப்பதற்காக உடனே திரும்பி வந்தேன்.
நான் வருகிறேன்". என்று கூறிவிட்டு விரைவாக திரும்பிச் சென்று
விட்டார். |
அரசனுக்கு
அந்த மகானின் நடத்தை அதிசயமாகவும், வியப்பாகவும் இருக்கவே, தனது அமைச்சரிடம்
அதற்கான காரணத்தை வினவினார். அமைச்சர் இரண்டு நாட்களில் காரணத்தை கண்டு
பிடிப்பதாக கூறிச் சென்று, இரண்டு நாட்கள் கழித்து வந்து அரசனிடம்
கீழ்கண்டவாறு கூறினார். "அரசே, அந்த மகான் நம்முடன் தங்கி இருந்த
பொழுது அவருக்காக சிறப்பு உணவு செய்வதற்காக ஒரு புதிய சமையல் கலை வல்லுநரை
ஏற்பாடு செய்து இருந்தோம் அல்லவா? அவன் வெறும் சமையல்காரன் மட்டுமல்ல.
அவன் நமது அண்டை நாட்டு அரசரால் தேடப்பட்டுவரும் ஒரு மிகப் பெரிய கொள்ளைக்காரனும்
கூட. இங்கு ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்து கொண்டு, நம்முடைய அரண்மனையை
நோட்டம் விட்டு, பிறகு ஒரு நாள் கொள்ளை அடிப்பதற்காக திட்டமிட்டு சமையல்காரனாக
வேலையில் சேர்திருக்கின்றான். ஒரு வாரமும் அந்த திருடனால் சமைக்கப்பட்ட
உணவை உண்டதினால், அவனுடய எண்ண அலைகளால் பாதிக்கப்பட்டு நம்முடைய மகானுக்கும்
அந்த திருட்டு எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. |
| ஒரு தீயவன் சமைத்த உணவை உண்டதினால்
ஊறிய இரத்தம், வேறு நல்லவர்களால் சமைத்த உணவை உண்டதினால் ஒரு வாரம்
கழித்து நல்ல இரத்தமாக மாறி அந்த மகானின் உண்மையான நல்லுள்ளத்தை வெளிக்
கொணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர் அந்த மாலையை ஒரு வாரம் கழித்துத்
திருப்பிக் கொண்டு வந்திருக்கின்றார். அரசே! அந்த மகானின் மீது எந்த
குற்றமுமில்லை. அவருக்கு நாம் அளித்த உணவில்தான் குற்றம். ஏனென்றால்,
நாம் உண்ணும் உணவு நமது உணர்வுகளையும் பாதிக்கும் வல்லமை பெற்றது.
அது நல்லவர்களால் நல்ல உணர்வுகளோடு சமைக்கப்படும் பொழுது அந்த உணவை
உண்பவர்கள் மனதிலும் நல்ல உணர்வுகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்திற்கு
மட்டுமல்ல, நம்முடைய மன ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது நல்லவர்களால்
சமைக்கப்படும் நல்ல உணவு. |
| |
|

வழங்கியவர்: திரு. இரா. சந்திரமௌலி, பெங்களூர். |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|