| பப்ஸ் மசாலா செய்முறை |
| தேவையானப் பொருட்கள் |
| வெங்காயம்=அரை கிலோ |
கோஸ்=கால் கிலோ |
| கேரட்=150 கிராம் |
பீன்ஸ்=100 கிராம் |
| தக்காளி=150 கிராம் |
புதினா=சிறிது |
| இஞ்சி பூண்டு விழுது=1 தேக்கரண்டி |
கொத்தமல்லி=சிறிது |
| கரம் மசாலா=அரைத் தேக்கரண்டி |
மிளகாய்த்தூள்=ஒரு தேக்கரண்டி |
| மல்லித்தூள்=அரைத் தேக்கரண்டி |
மஞ்சள்தூள்=ஒரு சிட்டிகை |
| உப்பு=ஒரு தேக்கரண்டி |
எண்ணெய்=தேவையான அளவு |
| |
|
|
| செய்முறை |
| முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு
சூடானதும், இஞ்சி பூண்டு விழுதினைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை
வதக்கவும். பிறகு நறுக்கின வெங்காயம், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ்,
தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை
பட்டாணி கூட சேர்த்துக் கொள்ளலாம். அத்துடன் மசாலாத்தூள் மற்றும் உப்பையும்
சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பப்ஸ் உள்ளே வைக்கும் மசாலாவை
நமது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொள்ளலாம். சுண்டல் மசாலா, அவித்த
முட்டை மசாலா, இனிப்பு பூரணம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இங்கே முக்கியம் மேல் மாவு செய்வதுதான். |
| பப்ஸ் செய்யும் முறை |
| மைதா=ஒரு கிலோ |
சீனி=50 கிராம் |
| டால்டா=50 கிராம் |
உப்பு=20 கிராம் |
| தண்ணீர்=600 மில்லி |
டால்டா=600 கிராம் (தனியே) |
| |
|
|
| மைதா மாவு, சீனி, 50 கிராம் டால்டா,
உப்பு ஆகியவற்றை 600 மில்லி தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு சப்பாத்தி
மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். |
 |
| பிசைந்த மாவினை ஒரு வழவழப்பான, அகன்ற பலகையின்
மீது சப்பாத்தி உருட்டுக்கட்டை கொண்டு நன்கு தேய்த்து விரிக்கவும். |
 |
| சதுர அல்லது செவ்வக வடிவில் விரித்துக் கொள்ளவும்.
மாவின் கனம் ஒரே அளவாக இருக்க வேண்டும். சப்பாத்தி அளவிற்கு தடிமன்
இருந்தால் போதுமானது. |
 |
| அதன் மீது 300 கிராம் வனஸ்பதியை தடவவும். மாவின்
அனைத்து பகுதிக்கும் சேருமாறு சீராக தடவவும். அதன் பிறகு அந்த மாவினை
நான்காக மடிக்கவும். சிறிது நேரம் சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு
வைக்கவும். |
 |
| இப்போது மீண்டும் அதனை நீள் செவ்வகமாகவோ அல்லது
சதுரமாகவோ விரிக்கவும். மீண்டும் அதன் மீது மீதமுள்ள 300 கிராம் வனஸ்பதியை
தடவவும். நான்காக மடித்து அரை மணி நேரம் சென்று மீண்டும் தேய்த்து
விரிக்கவும். |
 |
| சப்பாத்தியைவிட சற்று தடிமனாக விரித்துக்
கொண்டு, அதனை சதுர அல்லது செவ்வக துண்டகளாக வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு
துண்டங்களிலும் ஒரு மேசைக்கரண்டி அளவு (அல்லது தேவையான அளவு) மசாலாவினை
வைத்து, மடித்து, ஒரு தட்டில் அடுக்கி ஓவனில் வைக்கவும். |
 |
| 200 டிகிரி C இல் 15
இல் இருந்து 20 நிமிடங்கள் வரை வைத்து வேகவைக்கவும். பப்ஸ்
பொன்னிறமாக மாறியவுடன் எடுத்து விடவும். |
 |
| இப்போது சுவைமிகு பப்ஸ் தயார்! |
 |
| முட்டை பப்ஸ் வேண்டுவோர் இந்த எளிய முறை முட்டை பப்ஸை முயற்சி செய்யலாம்.
முதலில் வெறும் பப்ஸை சற்று குழிவாக, நீள்வட்ட வடிவில் படத்தில் உள்ளது
போல், மேலே குறிப்பிட்டுள்ள முறையில் செய்து கொள்ளவும். |
 |
| இதற்கான மசாலாவை நாம் விரும்பியவாறு செய்து கொள்ளலாம். இங்கே தக்காளி,
வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட
மசாலா கொடுக்கப்பட்டுள்ளது. |
 |
| முட்டைகளை அவித்து எடுத்துக் கொள்ளவும். இதன்
பிறகு மசாலாவினை பப்ஸின் மேல் சிறிது வைத்து, முட்டையை இரண்டாக கீறி
அதனுள்ளும் சிறிது வைத்து, படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் வைக்கவும்.
பொடியாக நறுக்கின கொத்தமல்லித்தழை சிறிதினை மேலேத் தூவலாம். |
 |
| இது எளிதாக செய்யப்படும் ஒரு வகையான முட்டை பப்ஸ்.
இதனை சிறிது நேரம் ஓவனில் வைத்து எடுத்து, சாப்பிட மிகவும் சுவையாய்
இருக்கும். |
 |
| |
|