| தேவையானப் பொருட்கள் |
| சீனி=ஒரு கிலோ |
மிக்ஸட் ப்ரூட் ஜாம்=50 கிராம் |
| மைதா=ஒரு கிலோ |
உப்பு=5 கிராம் |
| வனஸ்பதி=800 கிராம் |
பேக்கிங் பவுடர்=5 கிராம் |
| நெய்=200 கிராம் |
எசன்ஸ்=10 மில்லி |
| முட்டை=30 |
ட்யூட்டி ப்ரூட்டி=100 கிராம் |
|
| செய்முறை |
| இயந்திரத்தில் செய்வதற்கான குறிப்புகளும்,
படங்களும் இங்கே இடம் பெற்றுள்ளன. இதையே சிறிய அளவில் செய்பவர்கள்,
கடைகளில் கிடைக்கும் கையினால் சுற்றிக் கலக்கக் கூடிய சிறிய கருவியைப்
பயன்படுத்தவும். பேட்டரி அல்லது மின்சாரத்தில் இயங்கக்கூடிய முட்டைக்
கலக்க உதவும் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது. அவை மிகவேகமாகச் சுற்றுவதால்
வெப்பத்தை உண்டாக்கி, சீனிப் போன்ற பொருட்களை இளகச் செய்துவிடும்.
கேக் நல்ல முறையில் வருவதற்கு மாவு பதமாக இருத்தல் மிகவும் அவசியம்.
பொருட்களை முறையான கால அளவில் சீராகக் கலத்தல், மாவு பதமாய் கிடைக்க
உதவும். |
| முதலில் சீனி, வனஸ்பதி, நெய், ஜாம்
ஆகியவற்றை ஒன்றாய் கலந்து கொள்ளவும். கலவை நன்கு கலந்து, கிரீம் போன்று
வரும் வரை கலக்கவும். |
 |
| முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக்
கொண்டு, அவற்றை சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கவும். முட்டைகளைக் கலக்கும்
போது மிகவும் கவனமாய் இருத்தல் அவசியம். அப்படியே எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக
ஊற்றிக் கலக்கக்கூடாது. ஒரு முட்டை அளவிற்கு சிறிது ஊற்றி, அது நன்கு
கரைந்த பின் அதே முறையில் சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கவும். |
 |
இத்துடன் உப்பு சேர்த்து அதன்பிறகு தேவையான எசன்ஸ்
சேர்க்கவும். கேக்கின் மணம் மற்றும் ருசியை நிர்ணயிப்பதில் எசன்ஸின்
பங்கு முக்கியம் என்பதால்
நல்ல தரமான எசன்ஸ்களை உபயோகிக்கவும். இரண்டு அல்லது மூன்று எசன்ஸ்களை
ஒன்றாய் கலக்கலாம். |
 |
| சீனி நன்கு கரைந்துவிட்டபிறகு, பேகிங் பவுடருடன்
கலந்த மைதாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். |
 |
| எல்லாம் நன்கு கலந்து, மாவு திரண்டு வரும் போது
எடுத்துவிடவும். |
 |
| அதன்பின் கூடை போன்ற காகிதக் கோப்பைகளில் மாவினை
நிரப்பவும். கோப்பை முழுவதும் மாவினை நிரப்பாமல் முக்கால் பாகத்திற்கு நிரப்பவும்.
விரும்பினால் மாவுடன் சிறிது ட்யூட்டி ப்ரூட்டி கலந்து காகிதக் கோப்பைகளில் நிரப்பலாம் அல்லது கோப்பை மாவின் மீது தூவிக் கொள்ளலாம். |
 |
| 200 டிகிரி வெப்பநிலையில் 15 நிமிடங்கள்
பேக் செய்யவும். மாவு சற்று அதிகம் நிரப்பியிருந்தால் கூடுதலாக
5 நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும். |
 |
| இப்போது சுவைமிகு கூடை கேக் தயார்! |
 |
| |
|
| |
|
| |
|