|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

| தேவையானப் பொருட்கள் |
| சீனி=ஒரு கிலோ |
ட்யூட்டி ப்ரூட்டி=400 கிராம் |
| மைதா=ஒரு கிலோ |
முந்திரி=300 கிராம் |
| வனஸ்பதி=800 கிராம் |
திராட்சை=300 கிராம் |
| நெய்=200 கிராம் |
ஜின்ஞர் சிப்ஸ்=50 கிராம் |
| மிக்ஸட் ப்ரூட் ஜாம்=200 கிராம் |
கேராமில்=50 மில்லி |
| முட்டை=30 |
எசன்ஸ்=15 மில்லி |
| உப்பு=5 கிராம் |
கேக் சீட்ஸ்=5 கிராம் |
| பேக்கிங் பவுடர்=10 கிராம் |
ஏலப்பொடி=ஒரு தேக்கரண்டி |
| ஜாதிக்காய்ப்பொடி=அரைத்தேக்கரண்டி |
|
|
| இயந்திரத்தில் செய்வதற்கான குறிப்புகளும்,
படங்களும் இங்கே இடம் பெற்றுள்ளன. இதையே சிறிய அளவில் செய்பவர்கள்,
கடைகளில் கிடைக்கும் கையினால் சுற்றிக் கலக்கக் கூடிய சிறிய கருவியைப்
பயன்படுத்தவும். பேட்டரி அல்லது மின்சாரத்தில் இயங்கக்கூடிய முட்டைக்
கலக்க உதவும் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது. அவை மிகவேகமாகச் சுற்றுவதால்
வெப்பத்தை உண்டாக்கி, சீனிப் போன்ற பொருட்களை இளகச் செய்துவிடும்.
கேக் நல்ல முறையில் வருவதற்கு மாவு பதமாக இருத்தல் மிகவும் அவசியம்.
பொருட்களை முறையான கால அளவில் சீராகக் கலத்தல், மாவு பதமாய் கிடைக்க
உதவும். |
| செய்முறை |
|
| முதலில் சீனி, வனஸ்பதி, நெய், ஜாம்
ஆகியவற்றை ஒன்றாய் கலந்து கொள்ளவும். கலவை நன்கு கலந்து, கிரீம் போன்று
வரும் வரை கலக்கவும். |
 |
| முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக்
கொண்டு, அவற்றை சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கவும். முட்டைகளைக் கலக்கும்
போது மிகவும் கவனமாய் இருத்தல் அவசியம். அப்படியே எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக
ஊற்றிக் கலக்கக்கூடாது. ஒரு முட்டை அளவிற்கு சிறிது ஊற்றி, அது நன்கு
கரைந்த பின் அதே முறையில் சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கவும். |
 |
| பிறகு உப்பு, ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, கேக்
சீட்ஸ் (சீரகம் போன்று இருக்கும்) சேர்த்தப் பின்பு தேவையான எசன்ஸ்
சேர்க்கவும். கேக்கின் மணம் மற்றும் ருசியை நிர்ணயிப்பதில் எசன்ஸின்
பங்கு முக்கியம் என்பதால் நல்ல தரமான எசன்ஸ்களை உபயோகிக்கவும். இரண்டு
அல்லது மூன்று எசன்ஸ்களை ஒன்றாய் கலக்கலாம். |
 |
| அதன்பிறகு பிளாக்ஜாக் அல்லது கேராமில் ஊற்றவும்.
இப்போது முந்திரியைச் சேர்த்து சிறிது நேரம் கலக்கவும். |
 |
| சீனி நன்கு கரைந்துவிட்டதா என்பதனைத் தெரிந்து
கொண்டு, மைதாவினை பேகிங் பவுடருடன் நன்கு கலந்து கொண்டு அதனை சிறிது
சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். |
 |
| பிறகு திராட்சை, டியூட்டி ப்ரூட்டி, ஜிஞ்சர் சிப்ஸ்
ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். |
 |
| எல்லாம் நன்கு கலந்து, மாவு திரண்டு வரும் போது
எடுத்து, விரும்பும் வடிவ பாத்திரத்தில் இட்டு, 180 டிகிரி
வெப்பநிலையில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும். |
 |
| வெந்த கேக்கினை எடுத்து, கிரீம் கொண்டு விருப்பத்திற்கேற்றார்போல்
அழகுபடுத்திக் கொள்ளவும். |
 |
| |
 |
| |
 |
| |
|
| |
|
| |
|
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|