| தேவையானப் பொருட்கள் |
| சீனி=ஒரு கிலோ |
எசன்ஸ்=10 மில்லி |
| மைதா=ஒரு கிலோ |
தண்ணீர்=50 மில்லி |
| முட்டை=30 |
பேக்கிங் பவுடர்=10 கிராம் |
| ஜெல்=40 கிராம் |
எண்ணெய்=200 மில்லி |
|
| செய்முறை |
| இயந்திரத்தில் செய்வதற்கான குறிப்புகளும்,
படங்களும் இங்கே இடம் பெற்றுள்ளன. இதையே சிறிய அளவில் செய்பவர்கள்,
கடைகளில் கிடைக்கும் கையினால் சுற்றிக் கலக்கக் கூடிய சிறிய கருவியைப்
பயன்படுத்தவும். பேட்டரி அல்லது மின்சாரத்தில் இயங்கக்கூடிய முட்டைக்
கலக்க உதவும் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது. அவை மிகவேகமாகச் சுற்றுவதால்
வெப்பத்தை உண்டாக்கி, சீனிப் போன்ற பொருட்களை இளகச் செய்துவிடும்.
கேக் நல்ல முறையில் வருவதற்கு மாவு பதமாக இருத்தல் மிகவும் அவசியம்.
பொருட்களை முறையான கால அளவில் சீராகக் கலத்தல், மாவு பதமாய் கிடைக்க
உதவும். |
| முதலில் சீனி, முட்டை, ஜெல், தண்ணீர்
ஆகியவற்றை ஒன்றாய் கலந்து கொள்ளவும். வனஸ்பதி, நெய் இல்லாத காரணத்தால்,
முட்டைகளை சிறிது சிறிதாகச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மொத்தமாக
சீனியுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம். |
 |
| இத்துடன் தேவையான எசன்ஸ் சேர்க்கவும். கேக்கின்
மணம் மற்றும் ருசியை நிர்ணயிப்பதில் எசன்ஸின் பங்கு முக்கியம் என்பதால்
நல்ல தரமான எசன்ஸ்களை உபயோகிக்கவும். இரண்டு அல்லது மூன்று எசன்ஸ்களை
ஒன்றாய் கலக்கலாம். |
 |
| சீனி நன்கு கரைந்துவிட்டபிறகு, பேகிங் பவுடருடன்
கலந்த மைதாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். |
 |
| அதன்பின் எண்ணெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் நன்கு கலந்து கொள்ளவும்.
எல்லாம் நன்கு கலந்து, மாவாகிய பிறகு எடுக்கவும். |
 |
| விரும்பும் வடிவ பாத்திரத்தில் நிரப்பிக் கொள்ளவும்.
கேக் வெந்து சற்று மேலெழும்பி வரும் என்றக் காரணத்தால், பாத்திரம்
முழுதும் மாவினால் நிரப்பாமல், முக்கால் பாகத்திற்கு நிரப்பவும். |
 |
| ஓவனில் வைத்து 180 டிகிரி வெப்பநிலையில்
35 நிமிடங்கள் பேக் செய்யவும். |
 |
சற்று அழுத்தமான, அதிகம் வெந்துள்ள ஓரங்களை வெட்டி
எடுத்து விடவும்.
|
 |
| கேக்கின் மேலே கிரீம் கொண்டு தடவவும். |
 |
விரும்பியவாறு அலங்கரித்துக் கொள்ளவும். சுவையான, அழகான ஸ்பான்ஞ்
கேக் தயார்!
|
 |
| |
|
| |
|
| |
|