தேங்காய் பால் அல்வா
இது ஒரு சுலபமான தயாரிப்பு, சுவையானதும் கூட.
தேவையானவை
தேங்காய் ஒன்று
பச்சரிசி ஒரு கப்
சீனி ஒரு கப்
செய்முறை
தேவையானவை
தேங்காய் ஒன்று
பச்சரிசி ஒரு கப்
சீனி ஒரு கப்
செய்முறை
- தேங்காயைத் துருவி இரண்டு கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
- பச்சரிசியை சிறிது நேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த பச்சரிசி மாவினை தேங்காய் பாலுடன் கலந்து ஒரு கனமான பாத்திரத்தில் இட்டு மிதமான தீயில் வேகவிடவும்.
- கட்டி விழாத வண்ணம் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நன்கு வெந்து வண்ணம் மாறியவுடன் சீனியைக் கொட்டி கிளறவும்.
- கலவை வெந்து திரண்டு பால்கோவா பதத்திற்கு வந்தபிறகு இறக்கி வைக்கவும்.

0 Comments:
Post a Comment
<< Home