அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Monday, November 22, 2004

மாங்காய் தொக்கு

தேவையானவை

மாங்காய் - 1 (பெரியது)
எண்ணெய் - 2 கப்
மிளகாய்த்தூள் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 20 கிராம்
உப்பு - கால் கப்

செய்முறை

  • வாணலியை காயவைத்து வெந்தயத்தை வெறும் சட்டியில் எண்ணெயில்லாமல் வறுத்துக் கொள்ளவும்.
  • வாசனை வந்தபின் எடுத்துவிடவும்.
  • பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து துருவிய மாங்காய் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி மாங்காயுடன் ஒரு கப் நீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  • வெந்தபின் மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
  • இன்னொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளித்து பெருங்காயப் பொடி, மிளகாய் பொடி, வெந்தயப் பொடி சேர்த்து உடனே அடுப்பை அணைத்துவிடவும்.
  • காரம் சேர்ந்த சூடான எண்ணெயை மாங்காயில் கொட்டி கிளறி காய்ந்த பாட்டிலில் போட்டு மூடிவிடவும்.
  • நன்கு ஊறி பதமானபின்பு பயன்படுத்தவும்.


வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.

0 Comments:

Post a Comment

<< Home