அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Tuesday, November 23, 2004

வறுத்த கோழி

தேவையானவை

கோழிக்கறி (எலும்பில்லாமல்) - அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் - கால் கப்
எண்ணெய் 2 - மேசைக்கரண்டி
நறுக்கிய காரட் - கால் கப்
நறுக்கிய குடைமிளகாய் - கால் கப்
உதிர்த்த காலிஃபிளவர் - கால் கப்
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
சோயாசாஸ் - 2 தேக்கரண்டி
தேன் - 2 தேக்கரண்டி
எள்ளு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • கோழிக்கறியினைச் சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, வளையங்களாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • பிறகு இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள காய்களையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் வினிகர், சிக்கன் துண்டுகள் மற்றும் எள்ளுப்பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • சற்று வெந்ததும் சோயாசாஸ் விட்டு மீண்டும் வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்.
  • சோளமாவினை நீரில் சற்று கெட்டியாக கரைத்து ஊற்றி வேகவிட்டு இறக்கி, பின் தேனை ஊற்றி சிவப்பு குடைமிளகாய்த் துண்டங்களைத் தூவி பரிமாறவும்.

0 Comments:

Post a Comment

<< Home