அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Wednesday, November 24, 2004

சொதி

தேவையானவை

முருங்கைக்காய் - 2
முட்டைகோஸ் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பாசிப்பருப்பு - 400 மி.லி
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 5 பல்
தேங்காய் - 2
எலுமிச்சை - 1
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • தேங்காயைத் துருவி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கெட்டிப்பால் எடுத்து தனியாக வைக்கவும்.
  • இரண்டாவது மூன்றாவது பாலை ஒன்றாய்ச் சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • முட்டைக்கோஸ், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்கிக் கொண்டு உரித்த வெங்காயத்துடன் உப்புச் சேர்த்து வேகவைத்து தனியாக வைக்கவும்.
  • பாசிப்பருப்பை வறுத்து எடுத்து அதனுடன் பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து மசிய வேகவிடவும்.
  • இப்போது வேகவைத்து எடுத்து வைத்துள்ள காய்கறிகளையும் இதனுடன் சேர்த்து இரண்டாவது மூன்றாவது தேங்காய் பாலினை ஊற்றிக் கிளறி வேகவிடவும்.
  • கொதிவரும் சமயம் இஞ்சியைத் தட்டி சாறு எடுத்து விடவும். அடிப்பிடித்து விடாமல் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.
  • கொதித்தவுடன் முதலில் எடுத்த தேங்காய் பாலினை விட்டு மீண்டும் கொதி வரும் சமயம் இறக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். எலுமிச்சை சாறு பிழிந்து சேர்க்கவும்.

1 Comments:

  • At 1:27 AM, Mookku Sundar said…

    ஆஹா...நாக்கில் நீர் ஊறுகிறது.

    தொண்டு தொடரட்டும்...

     

Post a Comment

<< Home