ஆந்திரா பருப்புப் பொடி
ஆந்திர மக்களின் அன்றாட உணவில் தவறாது இடம்பெறும் துணைப்பதார்த்தம் இது. ஒரு முறை செய்து பத்திரப்படுத்திவிட்டால் போதும். பல நாட்களுக்குப் பயன்படுத்தலாம். சுடு சோறு, பருப்புப் பொடி, மணக்கும் நெய், பொரித்த அப்பளம்.. இணையேதும் இல்லை இந்த 'காம்பினேஷனுக்கு'.
தேவையானவை
பொட்டுக்கடலை - 1/2 கிலோ
பெரிய பூண்டு தோலுடன் - 10 கிராம்
மிளகாய் வற்றல் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கால அளவு: 15 நிமிடங்கள்
வழங்கியவர்: செல்வி. நிரஞ்சனா, பவானி.
தேவையானவை
பொட்டுக்கடலை - 1/2 கிலோ
பெரிய பூண்டு தோலுடன் - 10 கிராம்
மிளகாய் வற்றல் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- அடுப்பில் வாணலியை வைத்து நன்றாக காயவிடவும்.
- உடைத்தப் பொட்டுக்கடலை, பெரிய பூண்டு, மிளகாய் வற்றல் மூன்றையும் ஒன்றாகப் போட்டு எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
- வறுத்த கலவையை ஒரு தட்டில் கொட்டி பரப்பி ஆறவைக்கவும்.
- கலவை ஆறியபிறகு மிக்ஸியில் இட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- மாவு சல்லடையில் சலித்தும் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
- பூண்டினை விரும்பாதவர்கள் இதே முறையில் இந்த பொடியினைப் பூண்டு தவிர்த்தும் செய்யலாம்.
- தேவையெனில் ஐந்து ஆறு கறிவேப்பிலை இலையினையும் வெறும் வாணலியில் சிறிது வறுத்து, சேர்த்தரைத்துக் கொள்ளலாம்.
- சிலர் தேங்காயைத் துருவி, வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்துக் கொள்வதும் உண்டு. தேங்காய் சேர்க்கும் பட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் அதனை உபயோகப்படுத்திவிட வேண்டும்.
கால அளவு: 15 நிமிடங்கள்
வழங்கியவர்: செல்வி. நிரஞ்சனா, பவானி.

0 Comments:
Post a Comment
<< Home