அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, November 26, 2004

அவித்த ஆம்லெட்

எளிதான, எல்லோரும் நன்கறிந்த உணவுதான். சற்று வித்தியாசமான முறையில் இங்கே தயாராகின்றது.

தேவையானவை
முட்டை - 1
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
வெண்ணெய் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை
  • ஒரு அகன்ற வாணலியில் அரைபாகத்திற்கு நீர் விட்டு கொதிக்கவிடவும். கொதிவர ஆரம்பித்தவுடன் அடுப்பின் தீயைக் குறைத்துக் கொள்ளவும்.
  • முட்டையின் கூரிய பகுதியை சற்றுப் பெரிதாக உடைத்துக் கொள்ளவும். முட்டை கரு எளிதில் வெளியே வருமாறு உடைத்துக் கொள்ளவும்.
  • முட்டை கருவை ஒரே ஊற்றில், தெறிக்காதவண்ணம் அருகில் வைத்து, கொதிக்கும் நீரில் ஊற்றவும்.
  • இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு பிறகு எடுத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
  • சூடாக இருக்கும்போதே அதில் மிளகுத்தூள் உப்பு இரண்டையும் கலந்து தூவவும். வெண்ணெயை மேலே இலேசாக தடவி விடவும்.


கால அளவு: 10 நிமிடங்கள்
வழங்கியவர்: திருமதி. பாக்கியம், சென்னை.

0 Comments:

Post a Comment

<< Home