மீன் கபாப்
வட இந்தியாவில், கடற்கரையோர நகரங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற உணவு இது. ஒரு மாறுதலுக்காக முயன்று பாருங்கள்.
தேவையானவை
மீன் - 1 கிலோ
நெய் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
முட்டை - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1 தேக்கரண்டி
ரொட்டித்தூள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கால அளவு: 30-45 நிமிடங்கள்
வழங்கியவர்: திரு. சண்முகம், நாகை.
தேவையானவை
மீன் - 1 கிலோ
நெய் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
முட்டை - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1 தேக்கரண்டி
ரொட்டித்தூள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- அதிகம் முட்கள் இல்லாத, சற்று பெரிய வகை மீனாய் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளவும்.
- மீனை சில நிமிடங்கள் வேக வைத்துத் தண்ணீரை வடித்து ஆறவைக்கவும்.
- பின்னர் தோல், எலும்புகளை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்தவுடன், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அதனுடன் மீன் விழுதினைச் சேர்த்து வதக்கவும்.
- ஈரம் வற்றிய பிறகு முட்டையை அடித்து, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, எலுமிச்சைசாறு கலந்து நன்கு கிளறி இறக்கவும்.
- கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அதனை வடை போல் தட்டிக் கொண்டு, ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து நெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
கால அளவு: 30-45 நிமிடங்கள்
வழங்கியவர்: திரு. சண்முகம், நாகை.

0 Comments:
Post a Comment
<< Home