கத்தரிக்காய் வற்றல்
பல நாட்கள் வீட்டுச் சாப்பாடு சாப்பிட இயலாதவர்கள், வீடு வந்ததும் முதலில் விரும்பிக் கேட்டுச் சாப்பிடுவது வற்றல் குழம்பினைத்தான். வெளியில் சாப்பிட்டுச் செத்துப் போன நாக்கினை உயிர்பிக்கும் சிறப்புக் குணம் அதற்கு உண்டு. மணத்தத்தக்காளி, மாங்காய் என்று பல வற்றல்களைக் கொண்டு வற்றல் குழம்பு தயாரிக்கப்பட்டாலும், கத்தரிக்காய் வற்றல் கொண்டு செய்யப்படும் குழம்பிற்கு ஒரு தனி மணமும், சுவையும் உள்ளது. கத்தரிக்காய் வற்றல் எப்படி செய்யவேண்டும் என்பதனை இங்குப் பார்க்கலாம்.
தேவையானவை
கத்தரிக்காய் - ஒரு கிலோ
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேவையானவை
கத்தரிக்காய் - ஒரு கிலோ
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- பூச்சியில்லாத நல்ல கத்தரிக்காய்களாக தேர்வு செய்து, காம்பினை கிள்ளிவிட்டு நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- நறுக்கிய துண்டுகளை ஒரு ஈயம் பூசிய பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் பொடி மற்றும் உப்பினைக் கலந்து கொள்ளவும்.
- புளியை நீரில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு கரைத்து, கத்தரிக்காய் உள்ள பாத்திரத்தில் ஊற்றவும். கத்தரிக்காய் துண்டங்கள் மூழ்கும் அளவிற்கு புளி நீர் ஊற்றவும்.
- பிறகு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
- ஒரு கொதி வந்த நிலையில் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி மூடி வைக்கவும்.
- சுமார் ஒரு மணி நேரம் சென்ற பிறகு நீரை வடித்து விட்டு கத்தரிக்காய் துண்டங்களை எடுத்து வெய்யிலில் உலர்த்தவும்.
- வெய்யிலில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு நன்கு உலர்த்தி பிறகு எடுத்து பத்திரப்படுத்தவும்.
- காரக் குழம்பு, வற்றல் குழம்புகளில் இதனை பயன்படுத்தலாம். குழம்பு கொதிக்கும் போது கடைசியாக இதனை குழம்பில் சேர்க்கவும்.

1 Comments:
At 10:32 AM, Anonymous said…
suvaiyo suvai
Post a Comment
<< Home