ஆட்டு எலும்பு சூப்
பன்னாட்டு சூப் வகைகள் பல இன்று பிரபலமாகிவிட்டாலும், நம்நாட்டு ஆட்டுக்கால் சூப்பிற்கு இணையேதும் இல்லை.
தேவையானவை
ஆட்டு எலும்பு - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - 6
பட்டை - இரண்டு துண்டுகள்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மேலும் இது போன்ற ஏராளமான உணவுக்குறிப்புகள் www.arusuvai.com இணையத்தளத்தில் கிடைக்கப்பெறலாம்.
தேவையானவை
ஆட்டு எலும்பு - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - 6
பட்டை - இரண்டு துண்டுகள்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- ஆட்டு எலும்பினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- நறுக்கிய வெங்காயம், உடைத்த மிளகு, மஞ்சள்பொடி ஆகியவற்றையும் அந்த தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும்.
- தண்ணீர் நன்கு கொதித்தவுடன், எலும்பில் உள்ள சாறு நீரில் இறங்கி எண்ணெய் போல் மிதக்கும்.
- இந்த நேரத்தில் பாத்திரத்தை இறக்கிவிட்டு, ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு ஆகியவற்றை தட்டிப் போடவும். அவை சிவந்து வந்தவுடன் கறிவேப்பிலையை அதில் போட்டுத் தாளிக்கவும்.
- பிறகு எலும்பு நீரை அதில் ஊற்றி, தேவையான அளவு உப்பையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்துவிட வேண்டும்.
- சற்று கொதித்தவுடன் இறக்கி சூடாய் அருந்தவும்.
மேலும் இது போன்ற ஏராளமான உணவுக்குறிப்புகள் www.arusuvai.com இணையத்தளத்தில் கிடைக்கப்பெறலாம்.

0 Comments:
Post a Comment
<< Home