கோபி குருமா
நேற்றுதான் காலிஃபிளவர் குருமா என்று ஒன்று கொடுத்தாய், இன்று அது என்ன கோபி குருமா என்பவர்களுக்கு, 'இப்படியும் காலிஃபிளவர் கொண்டு குருமா செய்யலாம்'.
தேவையானவை
காலிஃப்ளவர் - 1
உருளைக்கிழங்கு - கால் கிலோ
இனிப்பு தயிர் - அரை கப்
மாங்காய் சாறு - ஒரு கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
நெய் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 6
கரம்மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கால அளவு: 45 நிமிடங்கள்
பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு
வழங்கியவர்: டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
தேவையானவை
காலிஃப்ளவர் - 1
உருளைக்கிழங்கு - கால் கிலோ
இனிப்பு தயிர் - அரை கப்
மாங்காய் சாறு - ஒரு கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
நெய் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 6
கரம்மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முந்திரிப்பருப்பு, கசகசா, மிளகு மூன்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வெங்காயத்தை மைய அரைத்துக் கொள்ளவும். மற்றொன்றை வட்டவடிவில் துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கின் தோலுரித்து சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரையும் சுத்தம் செய்து சிறு பூக்களாக உதிர்த்துக் கொள்ளவும்.
- வாணலியில் நெய் விட்டு உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வேகவைத்து எண்ணெய் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதே நெய்யில் வெங்காயத் துண்டுகள், மஞ்சள்தூள், கரம்மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானவுடன் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு பிரட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- காலிஃப்ளவர் நன்கு வெந்ததும் தண்ணீர் வற்றியதும் தயிரினை நன்கு அடித்து பிறகு ஊற்றவும்.
- தேவையான அளவு உப்புச் சேர்த்து நெய் மிதக்கும் வரையில் வேகவிடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிவந்தவுடன் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போடவும்.
- சுமார் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அதில் புளிப்பு மாங்காய் சாற்றினை ஊற்றி தீயைக் குறைத்து குருமா கெட்டியாகும் வரை வேகவிடவும்.
கால அளவு: 45 நிமிடங்கள்
பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு
வழங்கியவர்: டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.

0 Comments:
Post a Comment
<< Home