அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Sunday, December 05, 2004

பானி பூரி

வட இந்தியாவில் இருந்து வந்தாலும், இன்று தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்ட சிற்றுண்டி வகை இது. வீதிக்கு வீதி வண்டி போட்டு விற்க ஆரம்பித்துவிட்டார்கள். பென்ஸ் காரில் வருபவரையும் இறக்கி, வண்டிக்காரரிடம் கையேந்தி நிற்க வைக்கும் சுவை இதற்குண்டு.

தேவையானவை

மைதா மாவு - 100 கிராம்
ரவை - 50 கிராம்
புளி - 10 கிராம்
மிளகாய் - 6
வெல்லம் - 10 கிராம்
தனியா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைத்தேக்கரண்டி
மசாலாத்தூள் - அரைத்தேக்கரண்டி
புதினா - சிறிது
எண்ணெய் - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • மைதா மாவு, ரவை அதற்குத் தேவையான உப்பு மூன்றையும் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை விட்டு தண்ணீர் தேவையான அளவு விட்டு பூரிமாவு போல் பிசைந்துக் கொள்ளவும்.
  • ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிசைந்த மாவை ஒரளவு பெரிய உருண்டைகளாகச் செய்யவும்.
  • பெரிய அப்பளமாகச் செய்து கொள்ளவும். பானி பூரி மிகவும் சிறிதாகவும் ஒரே அளவுடனும் இருப்பது அவசியம். இதற்கு ஏதாவது டப்பாவின் அடிப்பாகம் கூராகவுள்ள மூடியை ஏடுத்து அதை அப்பளத்தின் மீது வைத்து அழுத்திச் சிறு பூரிகளாக ஏடுத்து கொள்ளுங்கள்.
  • வாணலியில் சுத்தமான எண்ணெய் விட்டு அடுப்பில் வையுங்கள். காய்ந்ததும் பூரியைப் போட்டுப் பொரியுங்கள்.
    பூரி நன்றாக உப்பி வரும்.அதனை எடுத்து டப்பாவில் போட்டு மூடுங்கள்.
  • ஒரு பாத்திரத்தில் புளி,உப்பு,வெல்லம் ஆகியவற்றைப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விடவும். மிளகாய்,தனியா,சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்து கொள்ளவும்.
  • மசாலா பொடியையும் போட்டு, புதினாவை அரைத்து அதன் சாறைப் பிழிந்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.
  • பூரியின் மத்தியில் விரலால் ஒட்டை செய்து புளித்த நீரை மொண்டு இரண்டையும் சேர்த்துச் சாப்பிடவும்.

2 Comments:

  • At 6:17 AM, துளசி கோபால் said…

    இந்தப் பூரியை சாப்பிடுமுன் நடுவிலே ஓட்டை போட்டு இந்தப் புளித்தண்ணிலே முக்கறதுக்கு முன்னே கொஞ்சம் கொண்டைக்கடலை ( நம்ம ச்சனா தாங்க) சுண்டலுக்கு வேகவைக்கறமாதிரி வேக வச்சுகிட்டு அதுலே ஒரு ஸ்பூன் இந்தப் பூரிகுள்ளே ரொப்பி, பிறகு புளித்தண்ணிலே முக்கி சாப்பிட்டுப் பாருங்க. பிரமாதமா இருக்கும். மஹாராஷ்ட்ராவிலே ( பூனா)இப்படித் தருவாங்க!

    என்றும் அன்புடன்,
    துளசி.

     
  • At 8:20 PM, ரவியா said…

    நாகூர் பிரியாணி, காரைக்கால் முட்டைகொத்து பரோட்டா எல்லாம் எப்போங்க ?

     

Post a Comment

<< Home