அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Wednesday, December 08, 2004

அக்கார அடிசில்

பிராமணர்களின், அதுவும் குறிப்பாய் ஐய்யங்கார்களின் சிறப்பு உணவு இது. பாலில் செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் என்று சொல்லலாம். பால் அதிகம் சேர்ப்பதால் இதன் சுவை கூடுகிறது. சிலர் தண்ணீரே சேர்க்காமல், முழுக்க முழுக்க பாலிலேயே செய்வர். என்ன, அரிசி வேக கொஞ்சம் நேரம் ஆகும். அவ்வளவுதான்.

[அக்கார அடிசிலுக்கு பொருள் அல்லது பெயர்காரணம் யாராவது சொன்னால், அதனை அறுசுவை இணையத்தளத்தில் வெளியிடுகின்றேன்.]

தேவையானவை

பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - கால் கப்
கடலைப்பருப்பு - கால் கப்
வெல்லம் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
குங்குமப்பூ - கால் தேக்கரண்டி
முந்திரி - 12
திராட்சை - 12
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
பால் - 4 கப்
நெய் - கால் கப்

செய்முறை

  • சுத்தமான பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் சேர்த்து கழுவிக்கொள்ளவும்.
  • பாலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். பால் பொங்கியதும் அதில் அரிசி, பருப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும்.
  • வெல்லத்தைப் பொடித்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து தனியே ஒரு பாத்திரத்தில் சூடு படுத்தவும்.
  • வெல்லம் பாகாய் கரைந்தவுடன் எடுத்து வடிகட்டி, வெந்து கொண்டிருக்கும் சாதக் கலவையில் சேர்க்கவும்.
  • அத்துடன் சர்க்கரை மற்றும் பாதியளவு நெய் சேர்த்து பத்து நிமிடங்கள் கிளறவும்.
  • சற்று கெட்டியானதும், ஏலப்பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி பாலில் கரைத்த குங்குமப்பூவை அதில் சேர்த்துக் கலக்கவும்.
  • முந்திரி, திராட்சையை மீதமுள்ள நெய்யில் வறுத்து சாதத்தில் சேர்த்துக் கிளறவும். பொங்கல் பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.


கால அளவு: 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு
வழங்கியவர்: திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன், நாகை.

2 Comments:

  • At 1:19 PM, Anonymous said…

    Pl. see (maraththadi.com) where the recipe published doesnot match with yours :-(

    enRenRum anbudan, BALA

     
  • At 12:40 PM, D.V.Babu said…

    அன்பு நண்பர் பாலா அவர்களுக்கு,

    ஒரு தவறு நடந்துவிட்டது. பாசிப்பருப்பு (பயற்றம் பருப்பு இரண்டும் ஒன்றுதான்) கால் கப் என்றுதான் எழுதிக்கொடுத்து இருக்கின்றார். நான் அதனை ஒரு கப் என்று தவறுதலாக டைப் செய்து இருக்கின்றேன். இப்போது திருத்திவிட்டேன்.(இதற்குள் ஒரு கப் பயற்றம்பருப்பு போட்டு இதனை முயன்று பார்த்தவர்கள், தயவுசெய்து என்னைத் திட்டாமல், செய்ததை 'பயற்றம் கஞ்சி' என்று பெயர்மாற்றம் செய்து ருசித்துவிடவும்.)
    மற்றபடி, ஜெயஸ்ரீ அவர்களின் ரெசிபிக்கும், இதற்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி நான் விசாரிக்கப் போனபோது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இன்று மாலைக்குள் எழுதி வெளியிடுகின்றேன். தங்களது சுட்டிக்காட்டலுக்கு மிகவும் நன்றி.

    அன்புடன்
    பாபு

     

Post a Comment

<< Home