செட்டிநாடு வெள்ளை அப்பம்
செட்டிநாட்டு உணவுகளின் சிறப்புப் பற்றி சொல்லத் தேவையில்லை. உலகறிந்த விசயமது. இந்த வெள்ளை அப்பம் அதற்கு ஒரு சான்று.
தேவையானவை
பச்சரிசி - 4 கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
பால் - கால் கப்
உப்பு - 2 தேக்கரண்டி
சோடா உப்பு - 3 சிட்டிகை
எண்ணெய் - சிறிது
செய்முறை
தேவையானவை
பச்சரிசி - 4 கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
பால் - கால் கப்
உப்பு - 2 தேக்கரண்டி
சோடா உப்பு - 3 சிட்டிகை
எண்ணெய் - சிறிது
செய்முறை
- அரிசியையும், உளுந்தினையும் சுமார் 3 மணி நேரம் ஊறவிடவும்.
- அதன் பிறகு நீரை வடித்து, இரண்டையும் சேர்த்து மாவாய் அரைத்துக் கொள்ளவும். மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்.
- இத்துடன் பால், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
- ஆப்பச்சட்டியை அடுப்பில் வைத்து, கால் சட்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் ஒரு கரண்டி மாவு எடுத்து அப்பமாக ஊற்றவும்.
- அப்பம் எண்ணெய்யில் மிதக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போட்டு வெள்ளையாக இருக்கும் போதே எடுத்து விடவும்.
- எண்ணெய் அதிகமாக இருப்பின், எண்ணெய் உறிஞ்சும் காகிதம் கொண்டு அழுத்தி எடுத்துவிடவும்.
- இதற்கு தக்காளிச் சட்னி சுவையான இணை.
- அப்பத்தை ஒவ்வொன்றாக ஊற்றி சுட்டு எடுக்கவும்.
- மாவு கொஞ்சம் கெட்டியாக வைத்து ஒரு அப்பம் முதலில் சுட்டு பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் பிறகு சிறிது நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளலாம்.

7 Comments:
At 8:38 PM, Jsri said…
பாபு,
"வந்துட்டாய்யா!" ன்னு சொல்லுவீங்களோன்னு பயமா இருக்கு. ஆனாலும் இன்னும் கொஞ்சம் மேல்குறிப்புகள் சொல்லாம இருக்க முடியலை.
#) ரெசிபியோட தலைப்பு அப்பம் இல்லை ஆப்பம்.
#) புழுங்கலரிசி, பச்சரிசி இரண்டுமே சமபங்குதான் எடுத்துப்பாங்க. ஒருவேளை செட்டுநாட்டுல இப்படித்தான் செய்வாங்களான்னு தெரியலை. ஆப்பமே செட்டிநாடு ஐட்டம்தான்னு நினைச்சுகிட்டிருக்கேன்.
#) மாவு அரைச்சதும் குறைஞ்சது 10 மணிநேரமாவது பொங்கிப் புளிக்க விடணும்.
#) ஆப்பச்சட்டி நடுவுல மாவுவிட்டு சட்டுனு சுழட்டும்போது, நடுவுல கனமாவும், ஓரம் மெல்லியதாவும் இருக்கும்.
#) வாணலில கால் பங்கு எண்ணைவிடறதெல்லாம் இந்தக் காலத்துக்கு கொஞ்சம் இல்லை, ரொம்ப ஓவர். நான்-ஸ்டிக் ஆப்பச்சட்டி வந்தாச்சு. சும்மா எண்ணைத் துணியால அதைத் துடைச்சாலே போதும்.
#) வாணலி எதுவா இருந்தாலும் அதைத் தகுந்த மூடியால மூடி, ஆப்பத்தை *ஒரு பக்கம் மட்டும்தான்* வேக வைக்கணும். தோசை மாதிரி இதைத் திருப்பிப் போடக் கூடாது. திருப்பிப் போடறதில்லையினால நமக்கு ஏதாவது வெரைட்டி ஸ்டஃப்பிங் இருந்தாலும் மேல்பக்கம் தூவிக்கலாம். காய்கறிகள், சீஸ்துருவல்னு கலக்கலாம்.
#) எல்லாத்தையும்விட அதிமுக்கியமானது, பொங்கவெச்சு செய்ய ஆரம்பிக்கும்போது சேர்க்கவேண்டியது பால் இல்லை; *தேங்காய்ப் பால்*. ஆப்பம் ருசியோட அஸ்திவாரமே அந்தப் பொங்கின புளிப்பும், தேங்காய்ப்பாலும்தான். என்ன காரணமோ ரெண்டு மூணு ஸ்பூன் சர்க்கரை வேற போடுவாங்க.
#) இதுக்கு சட்னி மட்டுமில்லை, ஆந்திர வடைகறி, கேரள அவியல், மோர்க்குழம்பு, stew எல்லாம் ஒத்துக்கும். சமத்து.
இப்படி நீங்க போடற குறிப்புக்கெல்லாம் ஆர்வக்கோளாறுல மேல்குறிப்பு போடறது சரியான்னு தெரியலை. என்னமோ போங்க.
At 11:20 PM, Anonymous said…
Dear JSri,
What you are talking about is aappam and what Babu is talking about is not aappam; they, in chettinad, typically call it as veLLai paNiyaaram. And the recipe he has given is exactly correct, word by word. And, yes, it goes very well with thakkaLi chutney.
Uma.
At 11:21 PM, D.V.Babu said…
வாங்க மேடம், நீங்க வரணும்னுதான் நான் எதிர்பார்கின்றேன்.. வந்துட்டாங்களே என்று கண்டிப்பாய் வருத்தப்பட மாட்டேன். ஆனா, இந்த முறை வசமா மாட்டிக்கிட்டீங்க :-) நீங்க சொல்ற குறிப்பு "ஆப்பத்திற்கு". நான் எழுதியிருப்பது "அப்பம்". நீங்க சொல்றது தோசை மாதிரி ஆப்பச்சட்டியில ஊத்தறது. பெரிசா இருக்கும். தேங்காய் பால் தொட்டுகிட்டு சாப்பிட சுவையா இருக்கும். நான் சொன்னது, வடை இல்லைன்னா அதிரசம் மாதிரி பொரிச்சு எடுக்கறது. இது சின்னதா இருக்கும்.
என்னோட தப்பும் கொஞ்சம் இருக்கு. நடுநடுவிலே அப்பம், ஆப்பம் னு பெயர் மாற்றம் பண்ணிக் கொஞ்சம் குழப்பி இருக்கேன். எழுதிக் கொடுத்தது யாருன்னு பார்த்தேன். என் ப்ரெண்டோட சிஸ்டர், டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை. அது இங்கிலீஸ்ல எழுதிக் கொடுத்து இருக்காங்களா.. அதனால அந்த பெயர் குழப்பம். சரி பண்ணிடுறேன்.
மற்றபடி, நான் ரொம்ப நாளாவே உங்க மெயில் ஐடி கிடைக்குமான்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். கிடைக்கலை. ஏற்கனவே ஒரு அழைப்பு விடுத்த மாதிரி எனக்கு ஞாபகம். இருந்தாலும் பரவாயில்லை. மறுபடியும் அழைக்கின்றேன். தயவுசெய்து என்னுடைய அறுசுவை இணையத்தளத்திற்கு சமையல் குறிப்புகள் கொடுத்து உதவுங்கள். தங்களுக்கு தெரிந்த எந்த உணவு வகையாக இருப்பினும் எனக்கு அனுப்பலாம். தங்களுடைய எழுத்து நடையில் அறுசுவையிலும் சில ரெஸிப்பிகள் வரவேண்டும் என்பது என்னுடய ஆசை. தங்களுக்கும் விருப்பம் இருப்பின் என்னுடைய babu@arusuvai.com முகவரிக்கு தெரிவியுங்கள்.
அன்புடன்
பாபு
At 6:40 AM, Jsri said…
Thats okay Babu. ஆமாம், நீங்க முக்கியமா தவறின இடம் *ஆப்பச்சட்டி*. அதுதான் குழம்பிட்டேன். சாரி. குழிப்பணியாரம்னு ஒண்ணு ஒரு குழி குழியா இருக்கற சட்டில செய்வாங்க. அதுலயும் அப்பம் செய்வோம். ஒருவேளை அதைச் சொல்லியிருக்கீங்களோன்னு கூட நினைச்சேன்.
At 7:00 AM, Jsri said…
சொல்ல விட்டுப்போனது; நான் எனக்கு முடிஞ்சநேரம் உங்களுக்கு ஏதாவது சமையல் குறிப்புகள் அனுப்பறேன். கொஞ்சம் நிறைய சோம்பேறி நான். அதான் பிரச்சனை. You are doing a great job!
At 1:29 PM, meena said…
உமா சொன்னது போல் 'வெள்ளைப்பணியாரம்' பக்குவம் மிகவும் சரி. ஆப்பச் சட்டி இல்லை சற்று குழிபோல் உள்ள இருப்புச் சட்டி (வானலி)
(பேர்தான் மாறிவிட்டது)அதனாலென்ன? ஒரு(தேங்காய்ப் பால் ஆப்பம்)
ரெசிப்பி எக்ஸ்ட்ராவா கெடைச்சிருச்சே!
உங்களின் அறுசுவை பக்கம் பிரமாதம்! பாபு'.
At 4:11 PM, D.V.Babu said…
ஜெய்ஸ்ரீ, உமா மற்றும் மீனா அனைவருக்கும் எனது நன்றிகள். நான் எழுதிப் போடுவதை நான் மட்டும்தான் படித்துக் கொண்டு இருக்கின்றேனோ என்ற சந்தேகம் மட்டும் நீண்ட நாட்களாய் இருந்தது. இப்போது குறைந்தது நான்கு பேராவது(என்னையும் சேர்த்து) படிக்கின்றார்கள் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. மீண்டும் எனது நன்றிகள்.
நான் பலமுறைக் குறிப்பிட்டு இருப்பதுபோல், இந்த வலைப்பதிவு என்னுடைய இணையத்தளத்திற்கு (www.arusuvai.com) ஒரு விளம்பரப்பக்கம் போன்றது. இதன் மூலமும் சிலரை எனது இணையத்தளத்திற்கு வரவைக்க வேண்டும் என்ற நோக்கில், எனது இணையத்தளத்தில் உள்ள குறிப்புகளில் இருந்து தினமும் ஒன்றாக இங்கு வெளியிடுகின்றேன். தற்போது இது வெறும் விளம்பர பக்கமாக மட்டும் இல்லாமல், குறை நிறைகளைச் சரிபார்க்கும் சோதனைக் கூடமாய் இருப்பதில் எனக்கு மிகவும் சந்தோசம். இங்கு செய்யப்படும் திருத்தங்கள் எனது இணையத்தளத்தைச் செம்மைப் படுத்துகின்றன.
அன்புடன்
பாபு
Post a Comment
<< Home