வெள்ளரி சூப்
முழுக்க முழுக்க சைவ சூப். சத்தானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.
தேவையானவை
வெள்ளரிக்காய் - 1
வெண்ணெய் - 20 கிராம்
பால் - 100 மி.லி
சோளமாவு - 2 தேக்கரண்டி
பாலாடைக்கட்டி -25 கிராம்
சர்க்கரை - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
பாலாக்கு இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேவையானவை
வெள்ளரிக்காய் - 1
வெண்ணெய் - 20 கிராம்
பால் - 100 மி.லி
சோளமாவு - 2 தேக்கரண்டி
பாலாடைக்கட்டி -25 கிராம்
சர்க்கரை - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
பாலாக்கு இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- வெள்ளரிக்காயினை நன்கு கழுவி, தோலுரித்து துருவியில் துருவிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் வெண்ணெயை இட்டு, அதனுடன் துருவிய வெள்ளரி மற்றும் பாலாக்கு இலைகளைச் சேர்க்கவும்.
- சுமார் 4 நிமிடங்கள் அவற்றை வதக்கியவுடன் அதில் சோளமாவு சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வதக்கவும்.
- தீயைச் சற்று குறைத்து, இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
- காய்கறிகள் நன்கு வேகும் வரை கொதிக்கவிடவும்.
பிறகு அதனை நன்கு கலக்கி அதனுடன் பால், மிளகுத்தூள், உப்பு மற்றும் துருவிய பாலாடைக்கட்டியைச் சேர்த்து கொதிக்கவிடவும். - பாலாடைக்கட்டி உருகியவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும்.

0 Comments:
Post a Comment
<< Home