தோப்பம்
மயிலாடுதுறைப் பக்கம் பிரபலமான இனிப்பு வகை இது. இதுவே சில மாறுதல்களுடன் சுழியன் என்றும் சுசியன் என்றும் அழைக்கப்படுகின்றது. இதனை வழங்கியவர் திருமதி. மனோ சாமிநாதன், 'ஷார்ஜா'வில் இருந்து.
தேவையானவை
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
பூரணத்திற்கு
தேங்காய் - ஒன்று
பொட்டுக்கடலை மாவு - ஒரு கைப்பிடி
வெல்லம் - ஒரு கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
மேல்மாவிற்கு
மைதா மாவு - ஒன்றரை கப்
இட்லி மாவு - கால் கப்
பேக்கிங் பவுடர் - அரைத் தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி
செய்முறை
தேவையானவை
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
பூரணத்திற்கு
தேங்காய் - ஒன்று
பொட்டுக்கடலை மாவு - ஒரு கைப்பிடி
வெல்லம் - ஒரு கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
மேல்மாவிற்கு
மைதா மாவு - ஒன்றரை கப்
இட்லி மாவு - கால் கப்
பேக்கிங் பவுடர் - அரைத் தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி
செய்முறை
- தேங்காயைப் பூந்துருவலாகத் துருவிக் கொள்ளவும். ஒரு வாணலியைச் சூடாக்கி, அதில் இந்த தேங்காய்த் துருவலைப் போட்டு, குறைவானத் தீயில் அதில் உள்ள நீரெல்லாம் சுண்டும் வரை வதக்கவும்.
- பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி, அது சூடாக இருக்கும் போதே பொட்டுக்கடலை மாவு, ஏலப்பொடி, பொடித்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து கையால் பிசையவும்.
- நன்கு பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- மேல் மாவிற்கு தேவையான அனைத்தையும் சிறிது நீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடாகியதும் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மேல் மாவில் தோய்த்து எண்ணெய்யில் போடவும்.
- உருண்டை வெந்து இளம் பழுப்பு நிறமானதும் எடுத்து விடவும்.

4 Comments:
At 1:59 AM, Kangs(கங்கா) said…
தோப்பம் - சொய உருண்டை என்று பாண்டிச்சேரி பக்கம் கூறுவார்களே, அதுவும் இதுவும் ஒன்றா (அ) வேறா?
At 10:27 AM, துளசி கோபால் said…
ரெண்டும் ஆல்மோஸ்ட் சேம்தான். ஆனா சொய்ய உருண்டைக்குப் பூரணம் கொஞ்சம் வேற மாதிரி.
கடலைப் பருப்பு அல்லது பாசிப்பருப்பு கிள்ளூப் பதமா வேகவச்சிக்கிட்டு, அதுலே இருக்கற தண்ணியை இறுத்திட்டு, தூள் வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய் எல்லாம் சேர்த்துப் நல்லா அம்மியிலே வச்சுப் பொடிச்சுகிட்டு அதை உருண்டையா உருட்டி, அரிசியும், கொஞ்சம் போல உளூந்துமூறவச்சு இட்டிலிமா போல அரைச்சுகிட்டு அதுலே முக்கி எண்ணெயிலே பொரிக்கணும்!
At 8:33 PM, D.V.Babu said…
சகோதரி துளசி கோபால் அவர்கள் ஏராளமான "ரெஸிபிஸ்" கைவசம் வைத்திருப்பது போல் தெரிகின்றது. ஏற்கனவே ஒருமுறை நானும் ரெஸிபி அனுப்பலாமா? என்று கேட்டு இருந்தார். ரெஸிபிகளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாய் பதில் அளித்து இருந்தேன். இன்றளவும் அதே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
அன்புடன்
பாபு
At 11:28 PM, Anonymous said…
"சுழியன்,சீப்பு பணியாரம்,மனோகரம்,பால் கொழுக்கட்டை"...இவையெல்லாம் மாயவரத்து வட்டார உணவுகள்.கேலரிகளை நினைத்து,கொழுப்பு தவிர்க்க வேண்டி,சாப்பிட முடியாமல் பெருமூச்சு மட்டும்தான் விடமுடிகிறது..நன்றி திரு.பாபு ;(
முடிந்தால் இதுபோன்ற உணவுகளை பொரிக்காமல்,வேகவைத்து சாப்பிட முறைகளிருந்தால் எழுதிப் போடுங்களேன்.
25 வருடங்கள் ஆகின்றன,பால் கொழுக்கட்டை சாப்பிட்டு.பொடியனாய் இருந்த காலத்தில் சட்டி,சட்டியாய் தின்றது.
மோர்கூழ் செய்முறை இருந்தால் எப்போதாவது போடுங்கள்.
திருமதியைக் கேட்டு பொரித்த குழம்பு செய்முறையை வேண்டுமென்றால் அனுப்புகிறேன்!
~ வாசன்
டமில் அட் சியர்புல்.காம்
Post a Comment
<< Home