மிளகுக் குழம்பு
நாகையைச் சேர்ந்த நளபாகச் சக்கரவர்த்தி, மாஸ்டர் குக் நாராயண அய்யர் அவர்கள் வழங்கிய குறிப்பு இது. நேற்று ஆவலுடன் ஓடி வந்து ஏமாந்து போன அன்புச் சகோதரி ஜெய்ஸ்ரீ அவர்களுக்காக..
தேவையானப் பொருட்கள்
புளி - 150 கிராம்
மிளகு - 20 கிராம்
கடலைப்பருப்பு - 20 கிராம்
மல்லி - 10 கிராம்
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
நல்லெண்ணெய் - பொரிப்பதற்கு
தேங்காய் - கால் மூடி
பூண்டு - 10 பல்
தேன் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேவையானப் பொருட்கள்
புளி - 150 கிராம்
மிளகு - 20 கிராம்
கடலைப்பருப்பு - 20 கிராம்
மல்லி - 10 கிராம்
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
நல்லெண்ணெய் - பொரிப்பதற்கு
தேங்காய் - கால் மூடி
பூண்டு - 10 பல்
தேன் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- புளியினை நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது துருவிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு மிளகு மற்றும் பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு சிறிது எண்ணெய்யில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், கொத்தமல்லி விதை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயையும் லேசாக வதக்கிக் கொள்ளவும்.
- பொரித்து வைத்துள்ள மிளகு, பெருங்காயம் மற்றும் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- புளிக்கரைசலை சட்டியில் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- புளிக்கரைசல் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து வேகவிடவும்.
- பூண்டை விரும்புகின்றவர்கள் உரித்தப் பூண்டினையும் வதக்கி குழம்பில் சேர்க்கவும்.
- குழம்பு கொதித்து நன்கு சுண்டி வரும் போது சிறிது தேன் விடவும். தேனுக்கு பதிலாக சிறிது வெல்லமும் சேர்க்கலாம்.

4 Comments:
At 10:35 PM, Jsri said…
நான் சொன்னதுக்காக வத்தக்குழம்பு போடுவீங்களோன்னு நினைச்சேன். மிளகு குழம்பு. ஹூம். அதுவும் எனக்குப் பிடிச்சதுதான். ஸ்விட்சர்லாந்துக்கே செஞ்சு எடுத்துகிட்டு போய் சாப்பிட்டேன். :)
(ஓசி)கருவேப்பிலை வாசம் தான் கொஞ்சம் குறையுது. :) பொங்கும்போது ஒரு ஸ்பூன் தேங்காய்ப்பால் இன்னும் பட்டையைக் கிளப்பும். நாளைக்கு இதுதான் எங்காத்துல.
At 10:38 PM, Jsri said…
சொல்ல மறந்துட்டேன், நாராயன அய்யருக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.
At 5:12 AM, Thangamani said…
நல்லது. நானும் இங்கு சமைக்கவேண்டியிருப்பதால் உங்கள் பக்கங்களை அடிக்கடி பார்ப்பேன். இந்தக் குழம்பை செய்துபார்த்துவிடுகிறேன். நன்றி உங்களுக்கும், அய்யருக்கும்.
At 5:27 PM, இராதாகிருஷ்ணன் said…
பாபு, ஒரு சந்தேகம். சின்ன வயதில் மரத்தின் மீது கல்லை விட்டெறிந்து பொறுக்கித் தின்ற புளியங்காய், பழங்களுக்கு அளவில்லை. பிற்பாடு,புளி என்றாலே கெடுதல் என்று எங்கோ படித்தது (அல்லது கேட்டது) மனதில் படிந்துவிட்டது. புளியைப் பற்றிய 'உண்மை' விவரங்கள் இருந்தால் பகிர்ந்துகொள்ளவும். நன்றி!
Post a Comment
<< Home