அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Sunday, February 13, 2005

பெசரட் தோசை

இந்த சமையல் குறிப்பினை வழங்கியவர், திருமதி. மனோ சாமிநாதன், ஷார்ஜாவில் இருந்து. கூடுமானவரை கிராம் அளவுகளைத் தவிர்த்து, எல்லோரும் எளிதில் அளவிடும் வண்ணம், தேவையானப் பொருட்களை 'கோப்பை' அளவுகளில் குறிப்பிடுவது இவரது தனிச்சிறப்பு. வாரம் ஒரு உணவுக் குறிப்பினை அறுசுவை.com இணைய தளத்தில் எழுதி வருகின்றார்.

தேவையான பொருட்கள்
முழுப்பயிறு - ஒரு கப்
பயத்தம் பருப்பு - கால் கப்
பச்சரிசி - 2 மேசைக்கரண்டி
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - மூன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை
  • முழுப்பயிறு, பச்சரிசி, பயத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாகவே தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஊற வைத்தவற்றை எடுத்து அதனுடன் ஒரு வெங்காயம், இஞ்சி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • மீதியுள்ள வெங்காயங்களையும், பச்சை மிளகாய்களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியைச் சூடாக்கி அதில் 3 தேக்கரண்டி எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • இந்த தோசையை உடனேயே சுடலாம். சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றிப் பரப்பி, அதன் மேல் வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கலவையைத் தூவி, மூடி வைத்து வேகவிடவும்.
  • இந்த தோசையைத் திருப்பிப் போட்டு மறுபுறம் வேக வைக்கத் தேவையில்லை.

2 Comments:

  • At 5:12 AM, Kangs(கங்கா) said…

    எனக்கு பிடித்தமான தோசை. ஹைதராபத்தில் இருந்த போது சாப்பிட்டது.

     
  • At 7:46 AM, Jsri said…

    நன்றி.. இது கொஞ்சம் சந்தேகமாகவே என் இஷ்டத்திற்கான அளவில் செய்துகொண்டிருந்தேன். இனி சரியாகச் செய்யலாம். நாளைக்கு என்ன புதிதாக டிஃபன் செய்வது என்று மண்டையை உடைத்துக்கொள்ளும்போது, இது போன்ற பதிவுகள் பம்பர்.

     

Post a Comment

<< Home