ப்ளம் கேக்
கேக் நல்ல விதமாய் வருவதற்கு, நாம் தயார் செய்யும் மாவின் பக்குவம் சரியாய் இருத்தல் மிகவும் அவசியம். மாவு கலப்பதில்தான் அதன் மென்மையும் சுவையும் அடங்கியுள்ளது. இதற்கான இயந்திரங்கள் சிறிதும் பெரிதுமாய் இப்போது சந்தையில் நிறைய கிடைக்கின்றது. குறைந்த அளவில் வீட்டில் தயாரிக்கும் போது நிறையப் பேர் செய்யும் தவறு, முட்டை கலக்க உதவும் கருவி அல்லது அதனைப் போன்று வேகமாய் சுழலக்கூடியக் கருவிகளைக் கொண்டு மாவு கலத்தல். இவைகள் மிகவேகமாகச் சுற்றுவதால் வெப்பத்தை உண்டாக்கி, சீனிப் போன்ற பொருட்களை இளகச் செய்துவிடும். கேக்கும் கடினமாகி விடும். பொருட்களை முறையான கால அளவில் சீராகக் கலத்தல், மாவு பதமாய் கிடைக்க உதவும். செய்முறை விளக்கப்படங்களுடன் இங்கே பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
சீனி - ஒரு கிலோ
மைதா - ஒரு கிலோ
வனஸ்பதி- 800 கிராம்
நெய் - 200 கிராம்
முட்டை - 30
கேராமில் - 50
மில்லி மிக்ஸட் ப்ரூட் ஜாம் - 200 கிராம்
முந்திரி - 300 கிராம்
திராட்சை - 300 கிராம்
ட்யூட்டி ப்ரூட்டி - 400 கிராம்
ஜின்ஞர் சிப்ஸ் - 50 கிராம்
உப்பு - 5 கிராம்
கேக் சீட்ஸ் - 5 கிராம்
பேக்கிங் பவுடர் - 10 கிராம்
எசன்ஸ் - 15 மில்லி
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய்ப்பொடி - அரைத்தேக்கரண்டி
செய்முறை
குறிப்பு: சற்று சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள், அதற்கேற்றார்போல் எல்லாப் பொருட்களின் அளவினையும் ஒரே விகிதத்தில் குறைத்துக் கொள்ளவும்.
தேவையானப் பொருட்கள்
சீனி - ஒரு கிலோ
மைதா - ஒரு கிலோ
வனஸ்பதி- 800 கிராம்
நெய் - 200 கிராம்
முட்டை - 30
கேராமில் - 50
மில்லி மிக்ஸட் ப்ரூட் ஜாம் - 200 கிராம்
முந்திரி - 300 கிராம்
திராட்சை - 300 கிராம்
ட்யூட்டி ப்ரூட்டி - 400 கிராம்
ஜின்ஞர் சிப்ஸ் - 50 கிராம்
உப்பு - 5 கிராம்
கேக் சீட்ஸ் - 5 கிராம்
பேக்கிங் பவுடர் - 10 கிராம்
எசன்ஸ் - 15 மில்லி
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய்ப்பொடி - அரைத்தேக்கரண்டி
செய்முறை
- முதலில் சீனி, வனஸ்பதி, நெய், ஜாம் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து கொள்ளவும். கலவை நன்கு கலந்து, கிரீம் போன்று வரும் வரை கலக்கவும்.
- முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டு, அவற்றை சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கவும். முட்டைகளைக் கலக்கும் போது மிகவும் கவனமாய் இருத்தல் அவசியம்.
- அப்படியே எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஊற்றிக் கலக்கக்கூடாது. ஒரு முட்டை அளவிற்கு சிறிது ஊற்றி, அது நன்கு கரைந்த பின் அதே முறையில் சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கவும்.
- பிறகு உப்பு, ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, கேக் சீட்ஸ் (சீரகம் போன்று இருக்கும்) சேர்த்தப் பின்பு தேவையான எசன்ஸ் சேர்க்கவும்.
- கேக்கின் மணம் மற்றும் ருசியை நிர்ணயிப்பதில் எசன்ஸின் பங்கு முக்கியம் என்பதால் நல்ல தரமான எசன்ஸ்களை உபயோகிக்கவும். இரண்டு அல்லது மூன்று எசன்ஸ்களை ஒன்றாய் கலக்கலாம்.
- அதன்பிறகு பிளாக்ஜாக் அல்லது கேராமில் ஊற்றவும். இப்போது முந்திரியைச் சேர்த்து சிறிது நேரம் கலக்கவும்.
- சீனி நன்கு கரைந்துவிட்டதா என்பதனைத் தெரிந்து கொண்டு, மைதாவினை பேகிங் பவுடருடன் நன்கு கலந்து கொண்டு அதனை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
- பிறகு திராட்சை, டியூட்டி ப்ரூட்டி, ஜிஞ்சர் சிப்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- எல்லாம் நன்கு கலந்து, மாவு திரண்டு வரும் போது எடுத்து, விரும்பும் வடிவ பாத்திரத்தில் இட்டு, 180 டிகிரி வெப்பநிலையில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும். வெந்த கேக்கினை எடுத்து, கிரீம் கொண்டு விருப்பத்திற்கேற்றார்போல் அழகுபடுத்திக் கொள்ளவும்.
குறிப்பு: சற்று சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள், அதற்கேற்றார்போல் எல்லாப் பொருட்களின் அளவினையும் ஒரே விகிதத்தில் குறைத்துக் கொள்ளவும்.

0 Comments:
Post a Comment
<< Home