அல்கா பணியாரம்
உளுந்தில் செய்யக்கூடிய எளிதான பலகாரம். ருசியும் மிகுதியானதுதான்.
தேவையானப் பொருட்கள்
உளுந்து - கால் கிலோ (தோலுடன்)
சர்க்கரை - 400 கிராம்
தேங்காய் பால் - 2 கப் (கெட்டியாக)
ஏலக்காய் - 3
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேவையானப் பொருட்கள்
உளுந்து - கால் கிலோ (தோலுடன்)
சர்க்கரை - 400 கிராம்
தேங்காய் பால் - 2 கப் (கெட்டியாக)
ஏலக்காய் - 3
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- உளுந்தை ஐந்து மணி நேரம் ஊற வைத்து, தோல் போக நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- கழுவிய உளுந்தை கிரைண்டரில் இட்டு வடைக்கு அரைப்பதைப் போல் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாகவும், மிருதுவாகவும் அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்து எடுத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- தேங்காய் பாலில் சீனியைக் கொட்டி, ஏலத்தைப் பொடி செய்து போட்டு நன்கு கரைத்து வைக்கவும்.
- பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவினை உருண்டையாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
- அதிகம் சிவக்கக் கூடாது. தீயை மிதமாக வைத்துக் கொள்ளவும்.
- பொரித்ததை தேங்காய்ப்பாலில் போட்டு ஊற வைத்து சாப்பிடவும்.

6 Comments:
At 1:44 AM, shanmuhi said…
அருமையான சமையல் குறிப்புக்களை தருகிறீர்கள். வாழ்த்துக்கள்..
please visit to my webpage.
http://shanmuhi.yarl.net/
At 8:54 AM, Jsri said…
பச்சை தேங்காய்ப்பாலிலா கரைத்துவைக்க வேண்டும்? அதிக நேரம் வெளியில் வைக்க முடியாதே. செய்துபார்த்துவிட்டுச் சொல்கிறேன்.
உப்பு தேவையான அளவு என்று எழுதினால், வடைக்குப் போடும் அளவு யாராவது போட்டுவிடக் கூடிய சாத்தியம் இருக்கிறது. இது ஸ்வீட் என்பதால் ஒரு சிட்டிகை மட்டுமே போடுவார்களோ என்னவோ.
இந்தத் தோலோடு நனைத்துவைத்து, பின் தோலை நீக்கி அரைக்க வேறு ஏதாவது பிரத்யேகக் காரணங்கள் இருக்கின்றனவா? அப்படியே வெள்ளை உளுந்தை நனைத்தால் என்ன?
இது எந்த ஊர் பணியாரம்? செட்டிநாடா?
At 1:27 PM, D.V.Babu said…
பார்த்தீங்களா..! ஒரு அல்கா பணியாரக் குறிப்புல எத்தனை கேள்விகள்?! இதுக்குதான் நம்ம ஜெய்ஸ்ரீ அக்கா வேணும்கிறது. (நக்கீரர் உங்களுக்கு எந்த வகையில் சொந்தம்.?) அப்புறம் 'அல்கா' ன்ன என்னன்னு கேக்க மறந்துட்டீங்களா அல்லது ஏற்கனவே தெரியுமா? எனக்குத் தெரியலை. எல்லாக் கேள்வியையும் தூக்கிக்கிட்டு எழுதிக்கொடுத்தது யாருன்னு பார்த்து அந்த அட்ரஸ்க்கு ஓடினேன். ஜெ.கலைச்செல்வி, 99, பெருமாள் தெற்கு வீதி. பக்கத்துலதான். போன வேகத்தில் நான் அல்காவுக்கு அர்த்தம் கேட்டதும் அவங்க பயந்து போயிட்டாங்க. சத்தியமா அவங்களுக்குத் தெரியலை. செட்டிநாட்டுல செய்வாங்களா இல்லையான்னுத் தெரியலை. ஆனா மன்னார்குடி பக்கம் இது பிரபலமாம். தீபாவளிக்கு அவங்க வீட்டுல தவறாம இந்த ஐட்டம் இருக்குமாம்.
அப்புறம் தோலுரித்த வெள்ளை உளுந்துல செஞ்சா இந்த மாதிரி டேஸ்டா வராதாம். மிருதுவா இருக்காதாம். கருப்பு உளுந்துதான் பெஸ்ட்ன்னு சொல்றாங்க. அப்புறம் நான் என்ன சொல்றது.
பச்சைத் தேங்காய்பாலில்தான் கரைக்க வேண்டுமாம். இடியாப்பம், ஆப்பத்திற்கு செய்யும் தேங்காய் பால் மாதிரி. உப்பு பத்தி கேட்டேன். இது ஸ்வீட் ஐட்டம், ஒரு சிட்டிகை இல்லேன்னா இரண்டு சிட்டிகைதான் போடணும். அது எல்லாருக்கும் தெரியும்னு நினைச்சேன் என்றார்கள்.
என்னைப் பொறுத்தவரை இந்த தேவையான அளவு, சிறிதளவு, சிறிது நேரம் என்ற வார்த்தைகளையே வெறுக்கின்றவன். நான் ரெசிபி கேட்கும் எல்லார்கிட்டேயும் சொல்றது இதுதான். 'அது உப்போ, கொத்தமல்லியோ, கறிவேப்பிலையோ நீங்க எவ்வளவு அளவு போடுவீங்களோ அதைச் சொல்லுங்க. கூட குறைச்சி போடுறதை செய்யுறவங்க பார்த்துப்பாங்க' ன்னு. யாரும் கேக்குற மாதிரி தெரியலை. 'சிறிதளவு தண்ணீரில், சிறிது பருப்பை எடுத்துக் கொண்டு, சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து.. ' என்ற ரீதியில்தான் நிறைய வருகின்றன.
இதுநாள் வரைக்கும் என்னுடைய இணையத்தளத்திலே ஏற்கனவே வெளியான குறிப்புகளில் இருந்து தினமும் ஒன்றை எடுத்து இங்கே வெளியிட்டுக் கொண்டிருந்தேன். இனி ஏற்கனவே இல்லாத, புதுக்குறிப்புகளை முதலில் இங்கு வெளியிட்டு அதன்பிறகு அதனை இணையத்தளத்திற்கு ஏற்ற முடிவு செய்துள்ளேன். குறைகளைக் களைய இது ஒரு நல்ல வாய்ப்பு. இருக்கவே இருக்காங்க நம்ம ஜெய்ஸ்ரீ அக்கா.
அன்புடன்
பாபு
At 6:32 PM, Jsri said…
நன்றி பாபு தவறா நினைக்காததுக்கு. நானே எழுதிட்டு கொஞ்சம் தயங்கினேன், ஏன் கேட்டோம்னு. இப்ப (தோல்)பருப்பு நனைச்சு வெச்சுருக்கேன். நாளைக்கு செஞ்சு பார்த்து சொல்றேன்.
அல்கா- அது ஹல்காவா இருக்கும். ஹிந்தில ஹல்கான்னு லேசான அல்லது மெதுவானன்னு ஒரு அர்த்தம் வரும். ஒருவேளை சாஃப்டா இருக்கரதால அந்தப் பேரா இருக்கும்னு நினைச்சுட்டேன். அதான் சந்தேகம் கேட்கலை. :)
ஆமாம், தோல்பருப்பா நனைச்சா சுவை, சத்து ரெண்டுமே அதிகமா இருக்கும். நம்ப இட்லிக்கே அந்தப் பருப்புல செஞ்சா நிச்சயம் வித்தியாசம் தெரியும். நன்றி பாபு உங்க இந்தப் பதிவுகளுக்கு.
At 11:53 PM, மதி கந்தசாமி (Mathy) said…
நல்ல வேளை ஜெயஸ்ர் கேட்டாங்க. நான் இங்க என்னோட அக்கா ஒருத்தங்க கிட்ட அறுசுவை பார்க்க சொல்லியிருந்தேன். அவங்களும் இந்த உப்பு எந்தளவு போடுறதுன்னு தெளிவா இல்லியே. இந்தியாவுல எப்பிடிப் போட்வாங்கன்னு என்கிட்ட கேட்டாங்க. என்னடாது நம்மளைக் கேக்கிறாங்கன்னு இங்க வந்தா பதில் இருக்கு. :)
தாங்க்ஸ் ஜெயஸ்ர் & பாபு
At 8:57 PM, Jsri said…
சாரி, உடனே வந்து பின்னூட்டம் தர முடியலை. ரொம்ப வித்யாசமா இருந்தது.
நாங்க சுகியன்-னு ஒரு அயிட்டம் செய்வேம், தேங்காயைக் கிளறி உள்ளவெச்சு, வெளில உளுத்தமாவு தோய்ச்ச்சு. இது உள்ள உ.மாவு, வெளில தேங்காய்ப்பால்.. அவ்ளோதான் வித்தியாசம். ஆனா சாப்பிட்டுட்டு பொண்ணு(4 மாமியாருக்கு சமம்.) 'yummy ma!' ன்னு சொல்லிட்டா. வேற என்ன வேணும்? :) நன்றி.
Post a Comment
<< Home