கருணைக்கிழங்கு வடை
கருணைக்கிழங்கு சாப்பிட ருசியாக இருந்தாலும் சாப்பிட்டு முடிக்கிற நேரத்தில் நாக்கையும் தொண்டையையும் மெல்லிய ஊசிக் கற்றைகளால் குத்துவதுபோல் அது கொடுக்கும் அவஸ்தை இருக்கின்றதே.. இதற்காகவே பலர் அதனை தவிர்த்துவிடுகின்றனர். கருணைக்கிழங்குல உள்ள ஒவ்வொரு செல்லிலேயும்(பாரன்கைமா) கால்சிய ஆக்ஸலேட் படிகங்கள் நுண்ணிய ஊசி மாதிரி பல அடுக்காய் இருக்கும். இதுதான் சாப்பிட்டவுடன் நாக்கிலும், தொண்டையிலும் சிக்கி அரிப்பது மாதிரி ஒரு உணர்வை கொடுக்கின்றது. கொஞ்சம் புளி அதிகம் சேர்த்து சமைத்தால் அரிப்பை சிறிது குறைக்கலாம். இந்த கருணைக்கிழங்கு வடைக்குப் புளி எதுவும் சேர்க்கக் கூடாது.
தேவையானப் பொருட்கள்
கருணைக்கிழங்கு - கால் கிலோ
மைதா மாவு - 50 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - கால் லிட்டர்
செய்முறை
தேவையானப் பொருட்கள்
கருணைக்கிழங்கு - கால் கிலோ
மைதா மாவு - 50 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - கால் லிட்டர்
செய்முறை
- கருணைக்கிழங்கினை நன்கு மண் போகக் கழுவி, தோலைச் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொண்டு ஆவியில் வேக விடவும்.
- வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
- அவித்த கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- தேவையெனில் சிறிது நீர் சேர்த்துப் பிசையவும். பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்க்கவும். சோம்பினையும் தட்டி சேர்க்கவும்.
- அதன் பின், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவினை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

0 Comments:
Post a Comment
<< Home