சுருள் ஆப்பம்
வெறும் ஆப்பம், இடியாப்பம், வட்டல் ஆப்பம்.. இப்படி பல வகையான ஆப்பங்களுக்கு நடுவில் இது சுருள் ஆப்பம். எப்படி செய்யறதுன்னு இப்ப பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி - இரண்டரை கப்
தூளாக்கிய வெல்லம் - ஒரு கப்
பயத்தம் பருப்பு - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி - இரண்டரை கப்
தூளாக்கிய வெல்லம் - ஒரு கப்
பயத்தம் பருப்பு - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
- பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து ஒரு கப் தேங்காய் துருவலுடன் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
- பயத்தம் பருப்பை வாசனை வரும்படி வறுத்து எடுத்து, நன்றாக வேக வைக்கவும். வேகவைத்து எடுத்த பருப்புடன் வெல்லத்தூள், தேங்காய் துருவல், ஏலப்பொடி சேர்த்து கெட்டியான பூரணம் செய்து கொள்ளவும்.
- அடுப்பில் ஆப்பச்சட்டியை வைத்து மிதமான தீயில் ஆப்பம் ஊற்றி மூடி வைக்கவும். ஒரு நிமிடத்தில் ஆப்பம் வெந்து விடும்.
- ஒரு தட்டில் வெண்மையான பாகம் மேலே இருக்கும்படி திருப்பிப் போட்டு பூரணத்தை நீளவாட்டில் வைத்து பாய் சுருட்டுவது போல் இருபுறமும் மடித்து சுருட்டினால் ஒட்டிக்கொள்ளும்.
- சுவையான சுருள் ஆப்பம் ரெடி

1 Comments:
At 11:43 PM, Muthu said…
மக்களுக்கு நேரடியாகப் பயன்படும் விஷயத்தை எழுதும் உங்களுக்கு நன்றிகள் :).
Post a Comment
<< Home