கசோடி
பெயரே வித்தியாசமா இருக்கு இல்ல? வட இந்திய அயிட்டம் இது. 'காரக் கொழுக்கட்டை' ன்னு நாம சொல்லிக்கலாம்.
தேவையானப் பொருட்கள்
மைதா - அரைக் கிலோ
பாசிப்பருப்பு - 125 கிராம்
டால்டா - 150 கிராம்
எண்ணெய் - ஒரு கிலோ
மிளகாய்த்தூள் - 25 கிராம்
மல்லித்தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - அரைத் தேக்கரண்டி
சோம்புத் தூள் - அரைத் தேக்கரண்டி
மல்லித்தழை - அரைக் கட்டு
சோடா உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை
பூரணம்:
தேவையானப் பொருட்கள்
மைதா - அரைக் கிலோ
பாசிப்பருப்பு - 125 கிராம்
டால்டா - 150 கிராம்
எண்ணெய் - ஒரு கிலோ
மிளகாய்த்தூள் - 25 கிராம்
மல்லித்தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - அரைத் தேக்கரண்டி
சோம்புத் தூள் - அரைத் தேக்கரண்டி
மல்லித்தழை - அரைக் கட்டு
சோடா உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை
பூரணம்:
- பாசிப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு வடிகட்டி ஒன்றிரண்டாக வருமாறு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு சட்டியை அடுப்பில் வைத்து 75கிராம் எண்ணெய் ஊற்றி, அரைத்த பாசிப்பருப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சோம்புத்தூள், முக்கால் தேக்கரண்டி உப்பு ஆகிய எல்லாவற்றையும் கொட்டி 5 நிமிடத்திற்கு இளம் சூட்டில் கிளறவும்.
- சட்டியை இறக்கி மல்லிக் கீரையை பொடியாக நறுக்கிப் போட்டு நன்கு கிளறி, உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவினைக் கொட்டி, அதில் டால்டாவை உருக்கி ஊற்றி நன்கு தேய்த்துப் பிசறவும்.
- அத்துடன் அரைத் தேக்கரண்டி உப்பு, சோடா உப்பு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் (தேவையெனில் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்)ஆகியவற்றைச் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.
- பிறகு அவற்றை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையையும் நன்கு அகலமாகத் தட்டி அதற்குள் பூரணத்தை வைத்து மூடி உருட்டி மீண்டும் வடை மாதிரி தட்டி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள வடைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பாதாம் நிறம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மேல் மாவு:

0 Comments:
Post a Comment
<< Home