ப்ரட் ரோல்ஸ்
தேவையானப் பொருட்கள்
ப்ரட் துண்டங்கள் - 7
கேரட் - 1
குடை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1
உருளை - 2
தக்காளி - 2
பச்சைப் பட்டாணி - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
காரப் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி
செய்முறை
ப்ரட் துண்டங்கள் - 7
கேரட் - 1
குடை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1
உருளை - 2
தக்காளி - 2
பச்சைப் பட்டாணி - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
காரப் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி
செய்முறை
- உருளை, கேரட் பட்டாணியை வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலி அல்லது தவாவில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
- இதனுடன் இஞ்சிப் பூண்டு விழுதினையும் போட்டு வதக்கவும்.
- பிறகு நறுக்கிய தக்காளி, வேக வைத்தெடுத்த காய்கள் போட்டு வதக்கவும். அதன் பிறகு குடை மிளகாய்களை நறுக்கிப் போட்டு, காரப் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
- ஒரு ஸ்லைஸ் பிரட்டை எடுத்து தண்ணீரில் ஒரு நிமிடம் ஊற வைத்து எடுத்து தண்ணீரைப் பிழிந்து விடவும்.
- பிறகு பூரணத்தை எடுத்து நீளவாக்கில் வைத்து நன்றாக உருட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

1 Comments:
At 2:25 AM, மாண்ட்ரீஸர் said…
பாபு, உங்கள் மிளகுக் குழம்பு ரெசிப்பி அற்புதம்!!
Post a Comment
<< Home