அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Wednesday, February 23, 2005

வாழைக்காய் வடை

தினமும் ஒரு ரெஸிபி ன்னு டைட்டில்ல பெரிசா போட்டாச்சு.. ஆனா அப்பப்ப கொஞ்ச நாள் மிஸ் ஆயிடுது. விட்டுப்போன நாள் எல்லாத்துக்கும் சேர்த்து இன்னைக்கு கொடுத்துடுறேன்.

வாழைக்காயில பஜ்ஜி போடலாம். வடை போட முடியுமா? இப்படி செய்யலாம்னு சொல்றாங்க திருமதி. K. செந்தமிழ்ச்செல்வி.

தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 2 (சிறியது)
முளைக்கீரை - ஒரு சிறிய கட்டு
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - ஒன்று
உப்பு - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

  • வாழைக்காயை வேகவைத்துக் கொண்டு பொடிமாசிற்கு துருவுவது போல் துருவிக் கொள்ள வேண்டும்.
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, வெங்காயம் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • துருவிய வாழைக்காயுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து, உப்பையும் போட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு பிசைந்து வைத்துள்ள மாவினை வடையாக தட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்க வேண்டும்.
  • மீதியானால் தயிரில் ஊற வைத்து தயிர் வடையாகவும் உபயோகிக்கலாம்.

1 Comments:

  • At 1:37 PM, Chandravathanaa said…

    வாழைக்காய் வடை எனது அம்மாவும் முன்னர் சுட்டுத் தருவா.
    கொத்தமல்லிக்கீரை போடுவதில்லை.
    தேங்காய் எண்ணெயில் பொரிப்பா.

    வாழைக்காய் கட்லட் டும் செய்வா.

     

Post a Comment

<< Home