கோஸ் புகாத்
தேவையானவை
முட்டைகோஸ் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 5
வெங்காயம் - 2 பெரியது
கடுகு - அரைத்தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைத்தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மைதா மாவு - கால் கிலோ
டால்டா - 50 கிராம்
எண்ணெய் - அரை லிட்டர்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை
முட்டைகோஸ் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 5
வெங்காயம் - 2 பெரியது
கடுகு - அரைத்தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைத்தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மைதா மாவு - கால் கிலோ
டால்டா - 50 கிராம்
எண்ணெய் - அரை லிட்டர்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை
- முட்டைகோஸைக் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு அரை நிமிடம் நன்றாக வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய கோஸை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்கி விட வேண்டும்.
- இதனுடன் உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து கொள்ள வேண்டும்.
- பின்பு மைதாவை சலித்து உப்பு, டால்டா, சமையல் சோடா எல்லாம் சேர்த்து கெட்டியாக பிசைந்து சப்பாத்தி பலகையில் சிறு சிறு உருண்டைகளாக வைத்து வட்டமாக தேய்த்து அதில் வெந்த கோஸை ஒரு கரண்டி வைத்து இரண்டாக மடிக்க வேண்டும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் அதில் போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்க வேண்டும்.

1 Comments:
At 10:28 AM, துளசி கோபால் said…
அன்புள்ள பாபு,
ரொம்ப நன்றி!!!! இந்த ஊருலே முட்டைக்கோஸ் ரொம்பவே பெரிய சைஸிலே கிடைக்கும். கிலோக்
கணக்கு இல்லே. ஜஸ்ட் ஒண்ணு இந்த விலைன்னு இருக்கும். மலிவு வேற! வாங்குனதை எப்படிக்
கழிச்சுக் கட்டறதுன்னு எப்பவுமே யோசனையா இருக்கும்.
இனிமே கோபால் அடிக்க(!) வர்ற வரைக்கும் இந்த 'கோஸ் புகாத்' தான்!
என்றும் அன்புடன்,
துளசியக்கா
Post a Comment
<< Home