அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Saturday, March 26, 2005

7 ஸ்டார் கேக்

தேவையானப் பொருட்கள்

பால் - அரை லிட்டர்
சர்க்கரை - ஒன்றரை கப்
கடலைமாவு - ஒருகப்
தேங்காய் - ஒரு கப் துருவியது
ரவை - ஒரு கப்
மைதாமாவு - அரை கப்
காரட் - ஒரு கப் துருவல்
ஏலம் - 3
பேரிச்சைபழம் - ஒரு கப்
நெய் - 300 கிராம்
முந்திரிபருப்பு - கொஞ்சம்
செர்ரி பழம் - அலங்கரிக்க


செய்முறை

  • முதலில் காரட்டை பாலில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பேரிச்சம் பழத்தையும் வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் துருவலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி கோவா தயாரிக்கவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரை பாகு காய்ச்சவும்.
  • கம்பி பதம் வரும் போது மைதா, ரவை, கடலைமாவு போட்டு கிளறவும்.
  • பிறகு நெய் ஊற்றி கிளறவும். கோவா சேர்த்து கிளறி ஏலப்பொடி தூவவும்.
  • கேக் பதத்தில் வந்தவுடன் நெய் தடவிய தாம்பாலத்தில் கொட்டி அதில் முந்திரி பருப்பு ஒரு செர்ரி போட்டு அலங்கரிக்கவும்.
  • ஆறியவுடன் கேக் துண்டுகள் போட்டு உடனே சாப்பிடவும்.

0 Comments:

Post a Comment

<< Home