அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, March 11, 2005

பலாப்பழ கட்லெட்

பலாப்பழ சீசன் ஆரம்பமாயிடுச்சு. வெறும் சுளையாவே எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடுறது. கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி கட்லெட்டா செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க. அப்புறம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க. உபயம்: திருமதி. என். ரேவதி, நாகப்பட்டினம்.

தேவையானப் பொருட்கள்

பலாப்பழச் சுளைகள் - 20
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 4
சர்க்கரை - 100 கிராம்
பிரட் - 5 துண்டுகள்
பிரட் தூள் - ஒரு கப்
பால் - ஒரு டம்ளர்
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை

  • சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல், நார் நீக்கி நன்றாக உதிர்க்கவும்.
  • பிரட்டை பாலில் ஊறவைத்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • பலாச்சுளைகளை நறுக்கி போட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
  • சர்க்கரையைப் பாகு காய்ச்சி அதில் உதிர்த்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பிசைந்த பிரட்டு, ஏலக்காய் தூள், பலாப்பழக்கூழ் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.
  • அந்த கலவையை நன்றாகப் பிசைந்து வடை போல் தட்டி, பிரட்டு தூளில் அதைப்புரட்டி நெய் தடவி தோசைக்கல்லில் பரப்பவும்.
  • வெந்தவுடன் திருப்பிப்போட்டு பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
  • இது ஒரு இனிப்பான கட்லட்.

0 Comments:

Post a Comment

<< Home