ரவை சர்க்கரை பொங்கல்
ரவாவில உப்புமா, கேசரி மட்டுமில்ல, பொங்கல் கூட செய்யலாம்னு சொல்றாங்க திருமதி. டி. விஜயலெட்சுமி. எப்படின்னு பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:
ரவா - கால் கிலோ
வெல்லம் - கால் கிலோ
முந்திரி பருப்பு - 25 கிராம்
திராட்சை - 10 கிராம்
ஏலக்காய் - 5
நெய் - 100 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
டால்டா - 50 கிராம்
செய்முறை:
தேவையானப் பொருட்கள்:
ரவா - கால் கிலோ
வெல்லம் - கால் கிலோ
முந்திரி பருப்பு - 25 கிராம்
திராட்சை - 10 கிராம்
ஏலக்காய் - 5
நெய் - 100 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
டால்டா - 50 கிராம்
செய்முறை:
- சுத்தம் செய்த ரவாவை லேசாக டால்டா விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ரவாவின் அளவிற்கு இருமடங்கு தண்ணீர் ஊற்றி, வறுத்த ரவாவினையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து , வெல்லத்தை சீவி எடுத்துக் கொண்டு, கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
- வெல்லத்தைப் போட்டு கெட்டியாக வரும் வரை நன்கு கிளறவும்.
- நெய்யில் முந்திரி, ஏலக்காய், திராட்சை ஆகியவற்றைப் பொரித்து எடுத்து ரவா சர்க்கரைப் பொங்கலில் போடவும்.

0 Comments:
Post a Comment
<< Home