ஜவ்வரிசி புலாவ்
சமீபத்தில் அறுசுவை நடத்திய சமையல் போட்டியில், சிறப்பு உணவு வகைப் பிரிவில் முதல் பரிசு பெற்ற உணவு இது.
தேவையான பொருட்கள்
நைலான் ஜவ்வரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 5
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி துருவியது
பச்சைமிளகாய் - 5
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை
தேவையான பொருட்கள்
நைலான் ஜவ்வரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 5
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி துருவியது
பச்சைமிளகாய் - 5
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை
- ஜவ்வரிசியுடன் மஞ்சள் தூள் கலந்து மூன்று மணி நேரம் தண்ணீரில் முழ்கும் படி ஊற வைக்க வேண்டும்.
- பாசிப்பருப்பை அரைவேக்காடு வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய் இவை அனைத்தையும் போட்டு வதக்கவும்.
- அவை வதங்கியபின் ஊறிய ஜவ்வரிசி, வெந்த பருப்பு போட்டு 5 நிமிடம் கிளறவும்.
- கடைசியில் தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.

0 Comments:
Post a Comment
<< Home