தானிய புலாவ்
அறுசுவை சமையல் போட்டியில் சிறப்பு உணவுப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற புலாவ் இது. ருசியானது & சத்தானது.
தேவையான பொருட்கள்
பொரி அரிசி - 250 மில்லி
பச்சைபயறு - 100 மில்லி
முழு கருப்பு உளுந்து - 100 மில்லி
கோதுமை - 100 மில்லி
கொண்டைக்கடலை - 50 மில்லி
தேங்காய் - ஒரு கப் துருவியது
காராமணி பயிர் - 50 மில்லி
எண்ணெய் - சிறிதளவு தாளிக்க
மிளகாய் வற்றல் - 4
உளுத்தம் பருப்பு - அரைத்தேக்கரண்டி
கடுகு - அரைத்தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
கடலைப்பருப்பு - அரைத்தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேவையான பொருட்கள்
பொரி அரிசி - 250 மில்லி
பச்சைபயறு - 100 மில்லி
முழு கருப்பு உளுந்து - 100 மில்லி
கோதுமை - 100 மில்லி
கொண்டைக்கடலை - 50 மில்லி
தேங்காய் - ஒரு கப் துருவியது
காராமணி பயிர் - 50 மில்லி
எண்ணெய் - சிறிதளவு தாளிக்க
மிளகாய் வற்றல் - 4
உளுத்தம் பருப்பு - அரைத்தேக்கரண்டி
கடுகு - அரைத்தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
கடலைப்பருப்பு - அரைத்தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- பயிறு, உளுந்து, கோதுமை, கொண்டைக்கடலை ஆகியவற்றை வாணலியில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
- பின் இவற்றுடன் பொரி அரிசியையும் கலந்து கொள்ள வேண்டும்.
- இந்த தானியங்களின் கலவையில் அரை லிட்டர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேகவிடவும்.
- இரண்டு விசில் வந்ததும் வெளியில் எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.
- அடுப்பில் கடாய் ஏற்றி அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு பிரட்டவும்.
- பிறகு தானியகலவையை அதில் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
- அதன் பின்பு தேங்காய்த் துருவலை போட்டு மீண்டும் நன்றாக கிளறி இறக்கி விட வேண்டும்.
- இதனை இளஞ்சூட்டுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

0 Comments:
Post a Comment
<< Home