பால் வாழைக்காய் குழம்பு
அறுசுவை சமையல் போட்டியில் அமோக மதிப்பெண்களைப் பெற்று குழம்புகள் பிரிவில் முதலிடம் பெற்ற குழம்பு இது. சமைத்து, ருசித்துப் பாருங்கள்.
தேவையானப் பொருட்கள்
தேங்காய் - 2
வாழைக்காய் - 2
பட்டை மிளகாய் - 5
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 50 கிராம்
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
தேவையானப் பொருட்கள்
தேங்காய் - 2
வாழைக்காய் - 2
பட்டை மிளகாய் - 5
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 50 கிராம்
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
- தேங்காயை அரைத்து 4 டம்ளர் பால் எடுத்துக் கொள்ளவும்.
- பட்டை மிளகாய், மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் இவற்றை அம்மியில் வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு வாழைக்காயை தோல் உறித்து குண்டு குண்டாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அரைத்து வைத்துள்ள விழுதினை தேங்காய் பாலில் கரைத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வேகவிடவும்.
- உப்பு போட்டு குழம்பு நன்றாக கொதித்தப் பிறகு வேக வைத்து எடுத்துள்ள வாழைக்காயை போட்டு சுண்ட கொதிக்க வைக்கவும்.
- ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யில் கடுகு தாளித்து கொட்டவும். மீதி எண்ணெயை அப்படியே ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும்.

2 Comments:
At 2:22 PM, அல்வாசிட்டி.விஜய் said…
அறுசுவை பாபு, அருமையான வித்தியாசமான பதிவு. எண் சான் வயித்துக்காக தான் இந்த உலகமே இயங்குகிறது. அதற்கு அறுசுவையையும் தன்னலமில்லாமல் காட்டுகிறார்கள்.
என்னை மாதிரி விதவிதமான சாப்பாட்டு பிரியர்களுக்கு ஏற்ற பதிவு.
At 2:22 PM, அல்வாசிட்டி.விஜய் said…
அறுசுவை பாபு, அருமையான வித்தியாசமான பதிவு. எண் சான் வயித்துக்காக தான் இந்த உலகமே இயங்குகிறது. அதற்கு அறுசுவையையும் தன்னலமில்லாமல் காட்டுகிறீர்கள்.
என்னை மாதிரி விதவிதமான சாப்பாட்டு பிரியர்களுக்கு ஏற்ற பதிவு.
Post a Comment
<< Home