அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, March 18, 2005

ராகி கேரட் போளி

கேழ்வரகு ன்னு சொல்லிகிட்டு இருந்தப்ப இருந்த மதிப்பைவிட இப்ப ராகி ன்னு சொல்றப்ப அதிமான மாதிரி தெரியுது. கொஞ்ச கால இடைவெளிக்கு அப்புறம் மக்கள் மறுபடியும் 'ராகி' பக்கம் திரும்பியிருக்காங்க. இப்பல்லாம் ராகி நல்லா சேல்ஸ் ஆகுதுன்னு நிறைய பேர் சொல்றாங்க. என்ன பேர் சொல்லி கூப்பிட்டா என்னங்க.. சத்தான உணவை சாப்பிட்டா சரி.


தேவையான பொருட்கள்

ராகி - அரை கிலோ
கோதுமை - ஒரு கப்
பொட்டுக்கடலை - ஒரு கப்
வெல்லம் - 200 கிராம்
கேரட் - 3
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் - 6
நெய் - 200 கிராம்
கேரட் - 100 கிராம்

செய்முறை

  • ராகியை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊறவைத்து வடித்து உலர்த்தி வாணலியில் போட்டு வறுக்கவும்.
  • கோதுமையையும் சுத்தம் செய்து வாணலியில் வறுக்கவும்.
  • வறுத்த ராகி, கோதுமை, பொட்டுக்கடலை மூன்றையும் கலந்து மிஷினில் அரைக்கவும்.
  • கேரட்டைக் கழுவி துருவிக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு கேரட் துருவல் போட்டு வேக விடவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் விட்டு வெல்லம் போட்டு கொதித்து அதை வடிகட்டி அதை கேரட் வெந்ததில் போட்டு, தேங்காய் துருவல், ஏலக்காய் போட்டு இறக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள மாவை பாகில் போட்டு கைவிடாமல் கிளறவும்.
  • 10 நிமிடம் மூடிவைத்து ஆறியதும் வாழை இலை அல்லது ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரில் நெய் தடவி மாவை சிறிய உருண்டைகளாக வைத்து போளியாக தட்டவும்.
  • தோசை கல்லை அடுப்பில் போட்டு நெய் விட்டு போளியை போட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
  • இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். கேரட்டும் சேர்த்து இருப்பதால் சத்துகள் இருக்கின்றன.

0 Comments:

Post a Comment

<< Home