அவல் கேசரி
ரவை கேசரியைவிட சற்று வித்தியாசமான சுவை. செய்வதற்கு எளிதானது.
தேவையானப் பொருட்கள்
அவல் - அரை கிலோ
சர்க்கரை - 400 கிராம்
முந்திரி - 20
திராட்சை - 20
நெய் - 100 கிராம்
ஏலக்காய் - 5
குங்குமப்பூ - ஒரு தேக்கரண்டி
கேசரிபவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை
தேவையானப் பொருட்கள்
அவல் - அரை கிலோ
சர்க்கரை - 400 கிராம்
முந்திரி - 20
திராட்சை - 20
நெய் - 100 கிராம்
ஏலக்காய் - 5
குங்குமப்பூ - ஒரு தேக்கரண்டி
கேசரிபவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை
- அவலை சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் நெய் கொஞ்சம் விட்டு அவலை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- பிறகு முந்திரி, திராட்சை, ஏலக்காயை பொடி செய்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அதில் வறுத்த அவலை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
- பிறகு சர்க்கரையை பாகு காய்ச்சி அதில் அவலை போட்டு வேக விடவும்.
- நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காயைப் நெய்யுடன் ஊற்றிக் கிளறி வேகவிடவும்.
- பிறகு அதில் கேசரிபவுடர் கரைத்த நீர், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

0 Comments:
Post a Comment
<< Home