அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Sunday, March 20, 2005

கொண்டைக்கடலை வடை

கொண்டைக்கடலை வடைங்கிற பேரு ரொம்ப சாதாரணமா இருந்துச்சுன்னா 'சன்னா வெஜ் பால்ஸ்' ன்னு பேரை மாத்தி செஞ்சு பார்த்துடுங்க. பேரை மாத்தினாலும் ருசி மாறப்போறது இல்லை. உள்ளே வாழைப்பூ எல்லாம் சேர்த்து இருக்காங்க. சத்தான சமாச்சாரம் போல இருக்கு. கொடுத்து உதவிய P.பானுமதிக்கு நன்றி.

தேவையானப் பொருட்கள்

கொண்டக்கடலை - கால் கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
வாழைப்பூ=ஒன்று
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - அரை லிட்டர்

செய்முறை

  • கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து விடவும். கடலைப்பருப்பையும் சிறிது நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
  • அதன்பின் கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றை தேவையான உப்பு சேர்த்து மசால்வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும்.
  • வாழைப்பூவை பொடியாக நறுக்கி மோரில் ஊறவைத்து கொள்ளவும்.
  • அதன்பின் அதை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • அத்துடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் வாணலியில் வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்தவுடன் அரைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அதை மசால் வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சூடான கொண்டைக்கடலை வடை தயார்.

1 Comments:

  • At 11:45 AM, ஜீவா(Jeeva) (#7113738) said…

    வாழைப்பூ வடை கேள்விப்பட்டிருக்கிறேன். இது, வாழைப்பூ - கொண்டக்கடலை Hybrid வடை பொலிருக்கு!

     

Post a Comment

<< Home