அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Monday, March 21, 2005

புறாக் குஞ்சு ரோஸ்ட்

சமையல் போட்டியில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்த பதார்த்தம் இது. புகைப்படம் எடுப்பதற்குள் காணாமல் போய்விட்டது. மிஞ்சியது சில எலும்பு துண்டுகள் மட்டும்தான். [என்னதான் இருந்தாலும் ஒரு சமையல் போட்டிக்காக இரண்டு சமாதானப் பறவைகளை சம்ஹாரம் பண்ணியது ரொம்ப பாவம்ங்க] கொ.பா.தி.போ.

தேவையானப் பொருட்கள்

புறாக் குஞ்சு - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
பூண்டு - 3 பல்
தேங்காய் - ஒரு மூடி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - 5
பட்டை - ஒரு துண்டு
இஞ்சி - சிறுதுண்டு
பெரிய சீரகம் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைபழம் - அரை பழம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 50 கிராம்

செய்முறை

  • இரண்டு புறாக்குஞ்சுகளை சுத்தம் செய்து வயிற்று பாகத்தில் கீறி, குடல் மற்றும் தேவையில்லாத பாகங்களை எடுத்துவிட்டு முழு புறாவாக வைத்துக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், சீரகம், மிளகு பெருஞ்சீரகம், பட்டை ஒரு துண்டு, இஞ்சி சிறிது துண்டு, பூண்டு, தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • அரைத்த விழுது, உப்புத்தூள், மஞ்சள்தூள் சேர்த்த எலும்மிச்சை சாறு இவற்றில் புறாவினை தோய்த்து, நன்கு பிரட்டி சிறிது நேரம் ஊற விடவும்.
  • வாணலியில் வெண்ணெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி வெங்காயம் வெட்டிப் போட்டு கறியையும் சேர்த்து வதக்கவும்.
  • சற்று வதங்கியவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து வேகவிடவும்.
  • சிறிது நேரம் வேக வைத்து பின் 100 மில்லி கெட்டியான தேங்காய் பால் ஊற்றி சீறு தீயில் வேக வைக்கவும்.
  • கறி நன்றாக வெந்து சிவந்த நிறமாக எண்ணெய் தெளிந்து புரட்டினாற் போல் வந்ததும் இறக்கி வைக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home