கோதுமை அடை
ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கரண்டி அரிசி மாவு, கொஞ்சம் நறுக்கின வெங்காயம், கொஞ்சம் உப்பு எல்லாத்தையும் கொஞ்சம் தண்ணி விட்டு கலந்து, தோசையா ஊத்தி எடுத்து, இருக்கிற பொடி, ஜாம், சாஸ் னு அவசரத்துக்கு எதையாவது தொட்டுக்கிட்டு, பெரும்பாலும் வெறுமனே சாப்பிட்டுட்டு, ஆபிஸ்க்கு ஓட வசதியான bachelor food இந்த கோதுமை தோசை. அதையே கொஞ்சம் பொறுமையா இந்த மாதிரி செஞ்சா இன்னும் ருசியா சாப்பிடலாம்.
தேவையானப் பொருட்கள்
சம்பாகோதுமை குருணை - 200 கிராம்
கோதுமை மாவு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
முருங்கைக்கீரை - சிறு கைப்பிடி அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி
செய்முறை
தேவையானப் பொருட்கள்
சம்பாகோதுமை குருணை - 200 கிராம்
கோதுமை மாவு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
முருங்கைக்கீரை - சிறு கைப்பிடி அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி
செய்முறை
- கோதுமை குருணையை அரை லிட்டர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
- வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சியை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஊறிய கோதுமை ரவையுடன் கோதுமை மாவையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- அத்துடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், இஞ்சி, பூண்டு, உப்பு, முருங்கைக்கீரை அனைத்தையும் நன்கு கலந்து அடை வார்க்கும் பக்குவத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானவுடன், ஒரு கரண்டி மாவை ஊற்றி பரப்பி விட வேண்டும். ஓரத்திலும் நடுவிலும் அரை தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி விட வேண்டும்.
- 2 நிமிடம் கழித்து திருப்பிப் போட வேண்டும். வெந்த பிறகு எடுத்து விடலாம்.
- முருங்கைக்கீரைக்கு பதிலாகக் கறிவேப்பிலை போட்டுக் கொள்ளலாம். தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

1 Comments:
At 12:18 PM, selvanayaki said…
உங்கள் சமையல் குறிப்புகளில் பல, குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையாகத் தயாரிக்கும் வண்ணம் சிறப்பாக உள்ளன. கல்லூரி முடித்த கையோடு, அரைகுறை சமையல் அனுபவத்துடன் வெளிநாடுகளில் வாழ வரும் நம் பெண்களுக்கு, தமிழ்ச் சமையல் குறிப்புகள் இணையத்தில் கிடைப்பது வரப்பிரசாதமே! நீங்கள் இன்னும் நிறைய எழுதுங்கள்!!
Post a Comment
<< Home