அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, March 25, 2005

மசாலா முத்து மணி கொழுக்கட்டை

தேவையானப் பொருட்கள்

புழுங்கல் அரிசி - அரை படி
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 10
உப்பு - 3 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியே அரை மணிநேரம் ஊற விடவும்.
  • முதலில் அரிசியை கிரைண்டரில் உப்பு போட்டு கெட்டியாக நன்கு அரைக்கவும்.
  • அரைத்த மாவை பட்டாணி சைசில் சிறு சிறு உருண்டைகளாக இட்லி தட்டில் உருட்டி போடவும். பத்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்.
  • பிறகு பருப்பு வகைகளையும், மிளகாய், உப்பு, பெருங்காயத் தூள் போட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்தவுடன் அரைத்து வைத்துள்ள பருப்பு வகையை அதனுடன் சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும்.
  • பிறகு கொழுக்கட்டையை(சிறிது சிறிதாக உருட்டி வேகவைத்த உருண்டையை) அதனுடன் கலந்து நன்கு கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home