வட்டலாப்பம்
இஸ்லாமியர் இல்லத்து விசேஷங்களில் தவறாது இடம் பெறும் இனிப்பு வகை இது.
தேவையானப் பொருட்கள்
முட்டை=10
சர்க்கரை=250 கிராம்
முந்திரி=100 கிராம்
ஏலக்காய்=3
தேங்காய்=ஒரு மூடி
உப்பு=ஒரு சிட்டிகை
டால்டா=50 கிராம்
செய்முறை
தேவையானப் பொருட்கள்
முட்டை=10
சர்க்கரை=250 கிராம்
முந்திரி=100 கிராம்
ஏலக்காய்=3
தேங்காய்=ஒரு மூடி
உப்பு=ஒரு சிட்டிகை
டால்டா=50 கிராம்
செய்முறை
- ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக நுரை வரும் அளவு கலக்கி கொள்ளவும்.
- பிறகு அதில் சர்க்கரையை நன்றாக கரையும் அளவிற்கு சேர்த்து கலக்கவும்.
- அதன் பின் தேங்காயைத் துருவி கெட்டியாக அரைத்து ஒரு கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
- அதில் முந்திரியை விழுதாக அரைத்து கலந்து, ஏலக்காயைப் பொடித்து போட்டு உப்பையும் அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து டால்டாவையும் அதில் சேர்த்து குக்கரில் 45 நிமிடம் வேக விடவும்.
- வட்டலாப்பம் தயாராகிவிடும். ஆறியபின் சிறிது சிறிதாக கேக் துண்டுகளை போல் துண்டங்கள் போட்டுக் கொள்ளவும்.

0 Comments:
Post a Comment
<< Home