அரிசி பருப்பு சுண்டல்
தேவையானப் பொருட்கள்
புழுங்கல் அரிசி - கால் கிலோ
பயத்தம் பருப்பு - 200 கிராம்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
தேங்காய் - அரை மூடி துருவியது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
புழுங்கல் அரிசி - கால் கிலோ
பயத்தம் பருப்பு - 200 கிராம்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
தேங்காய் - அரை மூடி துருவியது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் அரிசி, பயத்தம் பருப்பு இவற்றை வாணலியில் தனித்தனியே பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- பின் வேறொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- கொதித்த பின் வறுத்து வைத்துள்ள அரிசி, பயத்தம் பருப்பு இவற்றை போட்டு வேக விடவும்.
- உப்பு தேவையான அளவு சேர்த்து அரிசி, பயத்தம்பருப்பு இவற்றை குழைய விடாமல் முக்கால் பதத்திற்கு10 நிமிடம் வேக விடவும். (தண்ணீர் இல்லை என்றால் சிறிது ஊற்றி கொள்ளவும்).
- வெந்த பின் இதை வடிகட்டி சிறிது நேரம் வைக்கவும்.
- வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், மிளகாய் (சிறியதாக நறுக்கிப் போடவும்) இவற்றை தாளித்து, வடிகட்டிய அரிசி பயத்தம் பருப்பில் போட்டு கிளறவும்.
- பின் தேங்காய் துருவல் கறிவேப்பிலை இவற்றை போட்டு கிளறவும். இது சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

0 Comments:
Post a Comment
<< Home