கம்பு கொழுக்கட்டை
அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றுவிடுவதால் தொடர்ச்சியாக தினமும் ஒரு உணவுக்குறிப்பு கொடுப்பதில் இடைவெளி விழுந்து விடுகின்றது. "அய்யய்யோ வந்துட்டான்யா" என்று பதறும், மற்றும் "எங்கே போய் தொலந்தான்" என்று தேடும் இரு சாராரும் தயவுசெய்து பொறுத்தருளவும்.
இன்றைய ஸ்பெஷல், மலிவான, சத்தான, சுவையான, செய்வதற்கு எளிதான 'கம்பு கொழுக்கட்டை'.
தேவையானப் பொருட்கள்
கம்பு மாவு - 3 கப்
ஏலக்காய் - 3
நெய் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு கப் துருவியது
வெல்லம் - 200 கிராம்
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை
இன்றைய ஸ்பெஷல், மலிவான, சத்தான, சுவையான, செய்வதற்கு எளிதான 'கம்பு கொழுக்கட்டை'.
தேவையானப் பொருட்கள்
கம்பு மாவு - 3 கப்
ஏலக்காய் - 3
நெய் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு கப் துருவியது
வெல்லம் - 200 கிராம்
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை
- முதலில் கம்பு மாவை 5 நிமிடம் வாணலியில் விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு கம்பு மாவில் தேங்காய், உப்பு, ஏலக்காய், நெய் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- அதன் பிறகு ஒன்றரை டம்ளர் தண்ணீரில் வெல்லத்தை போட்டு அடுப்பில் வைத்து சூடு படுத்தவும்.
- வெல்லம் நன்றாக கரைந்த பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு கலந்து வைத்துள்ள மாவில் வெல்லக்கரைசலை சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிசைந்து கொண்டு பின் சிறிய சிறிய கொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.
- இட்லி பானையில் வைத்து வேக வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான கம்பு கொழுக்கட்டை தயார்.

0 Comments:
Post a Comment
<< Home