உருளைக்கிழங்கு போண்டா
தேவையானப் பொருட்கள்
உருளைக்கிழங்கு - அரை கிலோ
பச்சைபட்டாணி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 10
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கடலைமாவு - அரை கிலோ
எண்ணெய் - அரை லிட்டர்
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
அரிசிமாவு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கு - அரை கிலோ
பச்சைபட்டாணி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 10
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கடலைமாவு - அரை கிலோ
எண்ணெய் - அரை லிட்டர்
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
அரிசிமாவு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- வெங்காயம், பச்சை மிளகாயைக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- பட்டாணி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு நறுக்கி வைத்த வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
- அதில் மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
- அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- நன்கு வதங்கிய பிறகு இறக்கி ஆற விட்டு சிறிய சிறிய உருண்டையாக உருட்டி வைக்கவும்.
- பிறகு கடலைமாவு, சோடா உப்பு, அரிசிமாவு, உப்பு, சேர்த்து பஜ்ஜி மாவு மாதிரி கரைத்து கொள்ள வேண்டும்.
- இந்த மாவில் உருட்டிய உருண்டைகளை நனைத்து எண்ணெய்யில் பொரித்து எடுத்து வைக்கவும்.

0 Comments:
Post a Comment
<< Home