முட்டை குருமா
தேவையானப் பொருட்கள்
முட்டை - 3
தக்காளி - 50 கிராம்
பூண்டு - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - ஒரு மூடி துருவியது
கறிமசால் பொடி - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 50 மில்லி
செய்முறை
முட்டை - 3
தக்காளி - 50 கிராம்
பூண்டு - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - ஒரு மூடி துருவியது
கறிமசால் பொடி - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 50 மில்லி
செய்முறை
- முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- இத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
- இந்த கலவையை குக்கரில் வேக விடவும்.
- பிறகு இஞ்சி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவல், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பச்சைமிளகாய், கறிமசால் பொடி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- அத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
- ஒரு கொதி வந்தவுடன் முட்டைக் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கவும்.

2 Comments:
At 2:10 PM, Thangamani said…
//இந்த கலவையை குக்கரில் வேக விடவும்.//
????
அடிப்புடிச்சு கருகிடாதா?
At 9:38 PM, D.V.Babu said…
இந்த ரெஸிபியைக் கொடுத்தவர் இப்படிதான் எழுதியுள்ளார். ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகின்றது. இதனை வாணலியில் எண்ணெய் ஊற்றி வேகவைத்தால் ஆம்லெட் அல்லது முட்டை பொரியல் கணக்காக ஆகிவிடும். பொதுவாக அவித்த முட்டையை ஓடு நீக்கி குருமாவில் சேர்ப்பார்கள். அல்லது குருமா கொதிக்கும் போது முட்டையை உடைத்து ஊற்றுவார்கள். இது சற்று வித்தியாசமாக இருக்கவே இதனை இங்கு பதிப்பித்தேன். சிறிது நேரம் முட்டையை வேகவைத்து எடுத்தால் அடிப்பிடிக்காது என்றுதான் தோன்றுகின்றது. எதற்கும் முயன்று பார்க்க வேண்டும். இந்த ரெஸிபியில் நிறைய குறைகள் இருப்பது எனக்கே தெரிகின்றது. விரைவில் சந்தேகம் எழுப்பாத முட்டை குருமா ரெஸிபி ஒன்றினை மாற்றாக பதிப்பிக்கின்றேன்.
Post a Comment
<< Home