முட்டைக் குழம்பு
இதற்கு முன்பு வெளியிட்ட முட்டை குருமா குறிப்பு மிகவும் சரியான குறிப்பாக இல்லை. எத்தனைப் பேர் முயன்று பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. முயன்றவர்கள் மன்னிக்கவும். மற்றவர்கள் அதை விலக்கி விட்டு, இந்த குழம்பினை முயற்சித்துப் பார்க்கவும்.
தேவையானப் பொருட்கள்
முட்டை - 5
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 4 பல்
நெய் - 4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 4
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய்துருவல் - 2 மேசைக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 4
மல்லித்தழை - சிறிது
பட்டை - சிறிது
பிரியாணி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேவையானப் பொருட்கள்
முட்டை - 5
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 4 பல்
நெய் - 4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 4
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய்துருவல் - 2 மேசைக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 4
மல்லித்தழை - சிறிது
பட்டை - சிறிது
பிரியாணி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முட்டையை போதுமான நீரில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து, ஓட்டினை நீக்கிக் கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், கசகசா, தேங்காய்ப்பூ, மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பெரிய வெங்காயத்தை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
- தக்காளியை நறுக்கி மிக்ஸியில் இட்டு ஜூஸ் போல் ஆக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் பட்டை, இலை, கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
- பிறகு அரைத்த விழுது, தக்காளி ஜூஸ், மிளகாய்தூள், மல்லித்தூள், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மேலும் நன்கு 5 நிமிடம் வதக்கி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து விடவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இரண்டு பல் பூண்டு தட்டிப் போட்டு கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி தூவவும்.
- கொதிக்கும் மசாலாவில் முட்டையை இரண்டாக வெட்டிப்போட்டு உடைந்து விடாமல் கிளறி விட்டு வேறொரு பாத்திரத்தில் வைக்கவும்.

5 Comments:
At 2:23 AM, துளசி கோபால் said…
அன்புள்ள பாபு,
நல்லவேளை நான் செஞ்சு பார்க்கலை!:-))))))))
ஆனா இதே முட்டைக்குழம்பை 'என் வழி'யிலே சொல்லவா?
ரொம்ப வித்தியாசமில்லை. முட்டையை வேகவைக்கறதுலே மட்டுமே வேற வழி!
மைக்ரோவேவ் அவன் இருக்கறவங்க செஞ்சு பாருங்க.
ச்சின்ன ச்சின்ன மைக்ரோவேவ் கிண்ணத்துலே ஒவ்வொரு முட்டையையும் உடைச்சுத்
தனித்தனியா ஊத்திட்டு, ஒரு கத்தியாலே அந்த மஞ்சக்கருவிலே ரெண்டு குத்து!
அப்ப அதுலே இருக்கற காத்து வெளியேறிடும்.
இந்தக் கிண்ணங்களை வட்டமா மைக்ரோவேவ் அவென்லே உள்ளே இருக்கற கண்ணாடித்
தட்டுலே வச்சு, ஒரு மூணு அல்லது நாலு நிமிஷம் வச்சு எடுத்துடலாம்.
கொஞ்சம் ஆறின பிறகு கத்தியாலே அதை சுத்திக் கோடு போட்டமாதிரி ( வெந்த இட்டிலியை
எடுக்கறது போல)சுத்தினா, வட்டமா டிஸ்க் போல வந்துரும். அதையே குழம்புலே போட்டுறலாம்!
இது உடையாம இருக்கும்!
என்றும் அன்புடன்,
துளசியக்கா
At 8:59 AM, D.V.Babu said…
அன்புள்ள துளசி அக்கா அவர்களுக்கு,
வந்தனம், ரொம்ப நாளைக்கு பிறகு உங்ககிட்டே இருந்து ஒரு பின்னூட்டம் வந்து இருக்கு. ரொம்ப சந்தோசமா இருக்கு. (யார் சொன்னது என்னோட Blog ஐ நான் மட்டும்தான் படிக்கிறேன்னு..)
ஓவன்ல முட்டையை வேக வைச்சு குழம்புல போடுற ஐடியா வித்தியாசமா அதே சமயம் நல்லாவும் இருக்கு. இதை ஒரு குறிப்பா என் வெப்சைட்டுல போட்டுறேன்.
அப்புறம் ஓவன் இல்லாதவங்களுக்காக ஒரு டிப்ஸ். வித்தியாசமான வடிவத்துல ஆம்லெட் போடுறதுக்கான அச்சு இப்ப கடைகள்ல கெடைக்குது. பிஸ்கட் கட் பண்ணுற அச்சைவிட கொஞ்சம் பெரிசா இருக்கும். அதை தோசைக்கல் மேலே வைச்சு உள்ளே இரண்டு மூணு சொட்டு எண்ணெயை விட்டு, அதிலே முட்டையை ஒடைச்சி ஊத்தி அஞ்சு நிமிசம் வேகவிட்டு எடுத்தா வித்தியாசமான வடிவத்துல ஆம்லெட் (ஆஃப்பாயில்) கெடைக்கும். வேணும்னா இதை பத்திரமா திருப்பிப் போட்டு அடுத்தப் பக்கத்தையும் வேக வைச்சு எடுத்துக்கலாம். இதை குழம்பை இறக்கப் போற சமயத்துல அதில போட்டு கொஞ்ச நேரத்துல இறக்கிடணும்.
அன்புடன்
பாபு
At 9:44 AM, துளசி கோபால் said…
ஐய்யோ பாபு, இதென்ன அநியாயம்?
உங்க ப்ளாகை நீங்க மட்டும் படிக்கிறிங்கன்னு!
நான் தவறாம உங்க பதிவுகளைப் படிசுடுவேன். ஆனா பதில் போடத்தான் கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனா அதுலே ஏதாவது சொல்லவேண்டிய விஷயம் இருந்தாக் கட்டாயம் பின்னூட்டம் போட்டுருவேன்ல
என்றும் அன்புடன்,
துளசியக்கா
இங்கேயும் காலியிலே ப்ரேக்ஃபாஸ்ட்க்கு முட்டை 'சன்னி சைடு அப்'
இதுக்கு வட்டமான வளையமா அச்சு கிடைக்குது!
At 11:59 PM, Chandravathanaa said…
துளசி
அவன்ல முட்டையை வேக வைச்சு குழம்புல போடுற ஐடியா வித்தியாசமா அதே சமயம் நல்லாவும் இருக்கு.
பாபு
நான் இவைகளை எப்போதும் வாசிக்கிறேன். பிடித்தவைகளைச் சேமித்தும் வைக்கிறேன்.
At 1:28 AM, D.V.Babu said…
சகோதரிகள் இருவருக்கும் நன்றிகள். நான் விளையாட்டாகத்தான் அப்படி எழுதினேன். என்னுடைய பதிவினை நாள் ஒன்றுக்கு 150 ல் இருந்து 200 பேர் வரை பார்வையிடுகின்றனர். [இதில் இரண்டு பேரை கண்டுபிடித்து விட்டேன்:-) ] முன்பு 200க்கும் அதிகமாக இருந்தது. தமிழ்மணத்தின் வடிவம் மாறியதும் வருகை புரிவோரின் எண்ணிக்கையும் சற்று குறைந்து விட்டது. அது மட்டுமல்ல, நான் இரவில் (இந்திய நேரப்படி) பதியும் பதிவுகள்தான் அதிகம் பார்வையிடப்படுகின்றன. காரணம் நீங்கள் அறிவீர்கள்.
அன்புடன்
பாபு
Post a Comment
<< Home