முட்டை தொக்கு
இந்த வாரம் முட்டை வாரம்னு விளம்பரபடுத்தலாம் போல இருக்கு. இன்றும் ஒரு வித்தியாசமான முட்டை அயிட்டம். செய்முறை ரொம்ப சுலபமா இருக்கு. முட்டை தொக்குன்னு பேரு கொடுத்து இருங்காங்க. அதுதான் கொஞ்சம் இடிக்கும் போல இருக்கு.
தேவையானப் பொருட்கள்
முட்டை=4
எண்ணெய்=4 தேக்கரண்டி
வெங்காயம்=4
வரமிளகாய்=4
இஞ்சி=சிறு துண்டு
பூண்டு=4 பல்
உப்பு=ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்=கால் தேக்கரண்டி
பெருஞ்சீரகம்=அரைத் தேக்கரண்டி
செய்முறை
தேவையானப் பொருட்கள்
முட்டை=4
எண்ணெய்=4 தேக்கரண்டி
வெங்காயம்=4
வரமிளகாய்=4
இஞ்சி=சிறு துண்டு
பூண்டு=4 பல்
உப்பு=ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்=கால் தேக்கரண்டி
பெருஞ்சீரகம்=அரைத் தேக்கரண்டி
செய்முறை
- முட்டைகளை மூழ்கும் அளவிற்கு தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து, ஓட்டினை நீக்கி தனியே வைக்கவும்.
- இஞ்சி பூண்டினை தோலுரித்து எடுத்துக் கொண்டு, அதனுடன் வெங்காயம், நறுக்கின தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், பெருஞ்சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள விழுதினைப் போட்டு சுருள வதக்கவும்.
- நன்கு வதங்கியவுடன் அவித்த முட்டைகளைப் போட்டு கிளறி இறக்கவும். அவித்த முட்டைகளை அப்படியே சேர்க்கலாம். இல்லையென்றால் சிறு துண்டங்களாக நறுக்கியும் சேர்க்கலாம்.
- மஞ்சள் கருவினை விரும்பாதவர்கள் வெறும் வெள்ளைக் கருவினை மட்டும் துண்டுகளாக்கிப் போட்டு கிளறிக் கொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
<< Home