ரஸ்க் இனிப்பு முட்டை
இன்னும் ஒரு முட்டை அயிட்டமா.. என்று பயப்படவேண்டாம். பெயரில்தான் முட்டை இருக்கின்றதே தவிர உள்ளே இல்லை. (மைசூர் போண்டா மாதிரி)
தேவையானப் பொருட்கள்
மில்க் ரஸ்க் - கால் பாக்கெட்
சீனி - 200 கிராம்
தேங்காய் - ஒரு கப் துருவியது
ஏலக்காய் - 2
முந்திரி - 6 பருப்பு
நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை
தேவையானப் பொருட்கள்
மில்க் ரஸ்க் - கால் பாக்கெட்
சீனி - 200 கிராம்
தேங்காய் - ஒரு கப் துருவியது
ஏலக்காய் - 2
முந்திரி - 6 பருப்பு
நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை
- ரஸ்க்கின் ஒரத்தில் உள்ள சிவந்த பகுதிகளை எடுத்து விடவும்.
- பின் வெண்மை நிற பகுதிகளை மட்டும் மிக்ஸியில் கட்டிகள் இல்லாமல் பொடித்துக் கொள்ளவும்.
- ஏலக்காய், சீனியை பொடி செய்யவும்.
- தேங்காய் துருவலுடன் சீனி, ஏலப்பொடி சேர்த்து பிசறிவிட்டு 10 நிமிடம் ஊற விடவும்.
- இப்போது தேங்காய் துருவலுடன் சற்று தண்ணீர் கசிந்து இருக்கும். அத்துடன் ரஸ்க் தூளை சேர்க்கவும்.
- பொடியாக சீவிய முந்திரி, நெய் சேர்க்கவும்.
- எல்லாவற்றையும் நன்கு கலந்து பிசைந்து முட்டை வடிவத்தில் செய்து வைக்கவும்.
- செலவில்லாத சிக்கனமான இனிப்பு இது. இதனை குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்து இருந்து இறுக விட்டு பிறகு சாப்பிடலாம்.

0 Comments:
Post a Comment
<< Home